கவலைப்படாமல் இருங்கள் கடவுள் போல் ஜனாதிபதி கருணை காட்டுவார் என சிறையிலிருக்கும் ஆனந்தசுதாகரன் தனது மகள் சங்கீதாவிடம் கூறியுள்ளார். 

கடந்த மே மாதம் சிறையிலிருந்கும் தந்தையான ஆனந்த சுதாகரனை சந்தித்த மகள் சங்கீதாவிடமே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 

தாயை இழந்து தந்தையின் அரவணைப்புக்கா காத்திருக்கும் ஆயுள் கைதி ஆனந்தசுதாகரனை பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுவிக்க வேண்டும் என்று நாடளாவிய ரீதியில் கையெழுத்துப் போராட்டங்களும் கவனயீர்ப்புப் போராட்டங்களும் முன்னெடுக்கபட்டு வருகின்றன.

ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் ஆனந்தசுதாகரனின் மனைவி சுகயீனம் காரணமாக உயரிழந்த நிலையில் அவரது இரண்டு குழந்தைகளும் தாய்தந்தையின் அரவணைப்பின்றி உறவினர்களுடன் வாழ்ந்து வருகின்றனர்.

எனவே கிளிநொச்சிக்கு வரும் ஜனாதிபதி எமக்கு நல்ல பதில் ஒன்றைத்தருவார் என்ற நம்பிக்கை இருப்பதாக ஆனந்தசுதாகரின் இரு பிள்ளைகளும் அவர்களை பராமரித்து வரும் உறவினர்களும் தெரிவித்துள்ளனர்.