ஒகேநெக்காரோ போட்டுக் கொடுத்த சொந்த கோலும் லூக்கா மோர்டிக் இலக்கு தவறாமல் உதைத்த பெனல்டி கோலும்.  நைஜீரியாவுக்கு எதிரான உலகக் கிண்ண குழு 'டி' போட்டியில் குரோஏஷியாவுக்கு 2 க்கு 0 என்ற கோல்கள் அடிப்படையிலான வெற்றியை ஈட்டிக்கொடுத்தது.

காலினிங்க்ராட் விளையாட்டரங்கில் சனிக்கிழமை நள்ளிரவுக்குப் பின்னர் நடைபெற்ற இந்த இரண்டு அணிகளுக்கும் இடையிலான போட்டியின் முதல் 45 நிமிடங்களில் எந்த ஒரு அணியினாலும் கோலை நோக்கி ஒரு முயற்சியைத்தானும் எடுக்கக்கூடியதாக இருக்கவில்லை. 

ஆனால் போட்டியின் 32 ஆவது நிமிடத்தில் குரோஏஷிய வீரர் மரியோ மெண்ட்ஸூக்கிக் தாழ்வாகப் பாய்ந்து தலையால் முட்டிய பந்து நைஜீரிய வீரர் எட்டிபோ ஒகேநெக்காரோ பாதத்தில் பட்டு சொந்த கோலாக மாறியது.

இரண்டு அணிகளதும் பின்கள வீரர்கள் ஆதிக்கம் செலுத்திய இப் போட்டியின் 15ஆவது நிமிடத்தில் குரோஏஷியாவுக்கு கிடைத்த கோல் போடும் நல்ல வாய்ப்பை ஐவன் பெரிசிக் தவறவிட்டார். 17 நிமிடங்கள் கழித்து குரோஏஷியாவுக்கு சொந்த கோல் ஒன்று இனாமாகக் கிடைத்தது.

இடைவேளையின் பின்னர் வித்தியாசமான அணியாக காட்சிக்கொடுத்த நைஜீரிய உத்வேகத்துடன் விளையாடி குரோஏஷியாவுக்கு நெருக்கடியைக் கொடுத்தவண்ணம் இருந்தது. ஆனால் அவ்வணியினால் கோல் போட முடியாமல் போனது.

மறுமுனையில் நைஜீரிய பின்கள வீரர் வில்லியம் ட்ரூஸ்ட் எகொங் தனது பெனல்டி எல்லைக்குள் வைத்து முரணான வகையில் மரியோ மெண்ட்ஸூக்கிக்கை வீழ்த்தியதால் குரோஏஷியாவுக்கு பெனல்டி ஒன்று வழங்கப்பட்டது. அந்தப் பெனல்டியை 71 ஆவது நிமிடத்தில் லூக்கா மோட்ரிக் கொலாக்கினார்.

இப் போட்டியில் ஈட்டிய வெற்றியுடன் குழு டியில் குரோஎஷியா 3 புள்ளிகளுடன் முதலாம் இடத்தைப் பிடித்துள்ளது. ஆர்ஜன்டீனாவும் ஐஸ்லாந்தும் தலா ஒரு புள்ளியுடன் இரண்டாம் இடத்திலும் நைஜீரியா புள்ளி எதுவுமின்றி கடைசி இடத்திலும் உள்ளது.