மூன்றாம் நாளில் 300 ஓட்டங்களை குவித்தது மே.இ.தீவு

Published By: Vishnu

17 Jun, 2018 | 10:47 AM
image

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் மேற்கிந்தியத்தீவு அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 300 ஓட்டங்களை பெற்றுக்கொண்டுள்ளது.

இலங்கை மற்றும் மேற்கிந்தியத் தீவு அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் தொடர் கடந்த 14 ஆம் திகதி செய்ன்ட் லூசியாவில் ஆரம்பமானது.

இப் போட்டியில் இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸில் 79 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 253 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. இந் நிலையில் தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த மேற்கிந்திய தீவு அணி 300 ஓட்டங்களை பெற்று சகல விக்கெட்டுக்களையும் இழந்துள்ளது.

இந்த இன்னிங்ஸில் டேவோன் ஸ்மித் 61 ஓட்டங்களையும் சேன் டோவ்ரிச் 55 ஓட்டங்களையும் அதிகபடியாக பெற்றுக்கொண்டனர். இலங்கை  அணி சார்பாக லஹிரு குமார 4 விக்கெட்டுக்களையும் கசுன் ராஜித 3 விக்கெட்டுக்களையும் சுரங்க லக்மல் 2 விக்‍கெட்டுக்களையும் அகில தனஞ்சய ஒரு விக்கெட்டுக்களையும் பெற்றுக் கொண்டனர்.

போட்டியின் மூன்றாம் நாளான நேற்று தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணி ஒன்பது ஓவர்கள் நிறைவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 34 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சென்னை சுப்பர் கிங்ஸை வீழ்த்தியது லக்னோவ்...

2024-04-19 23:59:54
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-20 00:04:00
news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41