உலக கிண்ணப்போட்டிகள் இடம்பெறும் ரஸ்யாவில் பரபரப்பு சம்பவம்

Published By: Rajeeban

17 Jun, 2018 | 09:17 AM
image

ரஸ்யாவின் செஞ்சதுக்கத்திற்கு அருகில் வாகனமொன்று வீதியை விட்டு விலகி பொதுமக்கள்மீது மோதிய சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ரஸ்யாவில் 2018 உலககிண்ண கால்பந்தாட்ட போட்டிகள் இடம்பெறும் வேளை இடம்பெற்ற சம்பவம் சிறிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மொஸ்கோவின் மத்திய பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

டாக்சியொன்று வீதியை விட்டு விலகி பாதசாரிகள் காணப்பட்ட பகுதிக்குள் நுழைந்து பொதுமக்கள் மீது மோதியதில் கால்பந்தாட்டப்போட்டிகளை பார்வையிட வந்த இரசிகர்கள் உட்பட 8 பேர் காயமடைந்துள்ளனர்.

வாகனத்திலிருந்து வெளியேறி தப்பியோட முயன்ற சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார், அவர் கிர்கிஸ்தானை சேர்ந்தவர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.குறிப்பிட்ட நபர் வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்திருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை சம்பவம் தற்செயலானது போல தோன்றவில்லை என அந்த பகுதியில் காணப்பட்ட ஒருவர் சர்வதேச ஊடகமொன்றிற்கு தெரிவித்துள்ளார்.

அந்த நபர் வாகனநெரிசலில் சிக்குப்பட்டிருப்பதை பார்த்தேன் வாகனங்கள் மெதுவாக நகர்ந்துகொண்டிருந்த அவ்வாறான நிலையில் அவர் எப்படி வாகனத்தின் கட்டு;ப்பாட்டை இழக்க முடியும் என சம்பவம் இடம்பெற்ற இடத்தில் காணப்பட்ட ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்...

2024-04-16 15:39:41
news-image

டென்மார்க்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க பங்குச் சந்தை...

2024-04-16 16:56:21
news-image

வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு? -...

2024-04-16 14:27:38
news-image

பெருமளவு சிறுவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்தேன் -...

2024-04-16 11:40:44
news-image

பாஜக தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு விவகாரம்...

2024-04-16 10:42:45
news-image

இந்தியாவில் 3-வது பெரிய கட்சியாகிறது திமுக:...

2024-04-16 10:39:10
news-image

சிட்னி தேவாலயத்தில் இடம்பெற்றது பயங்கரவாத தாக்குதல்...

2024-04-16 10:30:18
news-image

சிட்னி தேவாலயத்தில் கத்திக்குத்து சம்பவத்தை தொடர்ந்து...

2024-04-15 17:57:13
news-image

சிட்னியில் மீண்டும் வன்முறை - கிறிஸ்தவ...

2024-04-15 16:42:28
news-image

இந்திய மக்களவை தேர்தல் 2024 |...

2024-04-15 15:53:42
news-image

நாடாளுமன்றத்தில் பாலியல் வன்முறைக்குள்ளான பெண் -...

2024-04-15 15:52:39
news-image

அமெரிக்காவைத் தொடர்ந்து கனடாவிலும் இந்திய மாணவர்...

2024-04-15 13:26:08