(ஆர்.ராம்)   

வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­னேஸ்­வரன் கூட்­ட­மைப்­பி­லி­ருந்து பிரிந்து சென்று தனித்து போட்­டி­யிடும் வகையில் கூட்­ட­மைப்­புக்கு சவா­லாக மாற்று அணி ஒன்றை உரு­வாக்கும் முயற்சியில் இர­க­சிய­ காய் நகர்த்தல்களில் ஈடுபட்டு வரு­வ­தாக அறியமுடிகிறது.

இந்­நி­லையில் விக்­னேஸ்­வரன் அவ்­வாறு தனி­யாக பிரிந்து செல்ல இட­ம­ளிக்க வேண்டாம் என தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பங்­காளிக் கட்­சி­க­ளான தமி­ழீழ விடு­தலை இயக்கம்(ரெலோ) தமி­ழீழ மக்கள் விடு­தலைக் கழகம் (புளொட்) ஆகி­யன கூட்­ட­மைப்பின் தலை­வரும் எதிர்க்­கட்­சித்­த­லை­வ­ரு­மான இரா.சம்­பந்­த­னி­டம் எடுத்துக் கூறியுள்ளதாகவும் தெரி­ய­வ­ரு­கி­றது.   

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறிசேன மாகாண சபை­க­ளுக்­கான தேர்தல் இவ்­வ­ருட இறு­திக்குள் நடத்­தப்­படும் என பகி­ரங்­க­மாக அறி­வித்­துள்ள நிலையில் தற்­போது அர­சியல் கட்­சிகள் அது குறித்த வியூகங்களை வகுக்க ஆரம்­பித்­துள்­ளன.   

அதன் பிர­காரம் வட­மா­காண முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வரன் அடுத்த தேர்­தலில் தான் போட்­டி­யி­டுவேன் என்­பதை மட்­டுமே அறி­வித்­துள்ள போதும் கூட்­ட­மைப்­பிலா அல்­லது தனித்தா என்­பது குறித்து தெளி­வாக எத­னையும் கூற­மு­டி­யாது. தொடர்ச்­சி­யாக மௌனம் காத்து வரு­கின்றார். 

எனினும் அண்­மைய நாட்­களில் தனிக் கட்­சி­யொன்றை ஆரம்­பிப்­பது தொடர்பில் சில நகர்­வு­களை மேற்­கொண்டு வரு­வ­தாக தக­வல்கள் கசிந்­துள்­ளமை குறிப்பிடத்தக்கது.