மேற்கிந்திய தீவுகளிற்கு எதிரான இரண்டாவது டெஸ்டின் மூன்றாவது நாளான இன்று இலங்கை அணி களத்தடுப்பில் ஈடுபடுவதற்கு மறுப்பு தெரிவித்துள்ளதை தொடர்ந்து ஆட்டம் ஆரம்பமாவது தாமதமாகியுள்ளது.

நேற்று மேற்கிந்திய அணிக்கு எதிராக பந்துவீசுவதற்கு பயன்படுத்தப்பட்ட பந்தை மாற்றுவதற்கு நடுவர்கள் முடிவு செய்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கை அணி இன்றைய ஆட்டத்தை ஆரம்பிக்க மறுத்துள்ளது.

இதனை தொடர்ந்து ஆட்டநடுவரிற்கும் இலங்கை அணி நிர்வாகத்திற்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் தொடர்கின்றன