பீபா உலகக் கிண்ணம் ; இன்றைய தினம் நான்கு போட்டிகள் 

Published By: Priyatharshan

16 Jun, 2018 | 01:46 PM
image

ரஷ்யா அரங்கேற்றும் 21ஆவது உலகக் கிண்ணப் கால்பந்தாட்டத்தின் மூன்றாவது நாளாள இன்றைய தினம் நான்கு லீக் போட்டிகள் நடைபெறவுள்ளன.

அவற்றில் ஒரு போட்டி இலங்கை நேரப்படி நள்ளிரவுக்கு சற்று பின்னர் ஆரம்பமாகவுள்ளது.

இந்த நான்கு போட்டிகளில் பெரும்பாலும் தரப்படுத்தலில் முன்னிலையில் உள்ள நாடுகள் வெற்றிபெறும் என எதிர்பார்க்க்ப்படுகின்றது.

பிரான்ஸ் எதிர் அவுஸ்திரேலியா

தரப்படுத்தலில் 7ஆம் இடத்திலுள்ள பிரான்ஸுக்கும் 36ஆம் இடத்திலுள்ள அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான சி குழுவுக்கான போட்டி கஸான் விளையாட்டரங்கில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இக் குழுவிலிருந்து இரண்டாம் சுற்றக்கு இலகுவாக முன்னேறக்கூடிய அணியாக பிரான்ஸ் திகழ்வதால் இன்றைய போட்டியில் அவுஸ்திரேலியா பெரும் சவாலை எதிர்கொள்ளவுள்ளது. 

உலகக் கிண்ணப் போட்டி வரலாற்றில் இந்த இரண்டு அணிகளும் முதல் தடவையாக சந்திக்கின்றன. எனினும் சினேகபூர்வ போட்டிகளில் விளையாடியுள்ளன. கடைசியாக நடைபெற்ற சிநேகபூர்வ போட்டியில் 6 க்கு 0 என்ற கோல்கள் கணக்கில் பிரான்ஸ் வெற்றிபெற்றது.

பெரு எதிர் டென்மார்க்

இன்று நடைபெறவுள்ள போட்டிகளில் சற்று பரபரப்பை ஏற்படுத்தக்கூடிய போட்டியாக இந்த இரண்டு அணிகளுக்கு இடையிலான போட்டி அமையவுள்ளது. 

மேலும் தரப்படுத்தலில் 11ஆம் இடத்தில் பெருவும் 12ஆம் இடத்தில டென்மார்க்கும் இருக்கின்றன. எனினும் அண்மைக்கால பெறுபேறுகளின் பிரகாரம் இந்தப் போட்டியில் டென்மார்க் வெற்றிபெறும் என்றே அனுமானிக்கப்படுகின்றது. இந்த இரண்டு அணிகளும் உலகக் கிண்ண வரலாற்றில் சந்திப்பது இதுவே முதல் தடவையாகும். 

ஆர்ஜன்டீனா எதிர் ஐஸ்லாந்து 

உலகக் கிண்ண வரலாற்றில் முதல் தடவையாக இறுதிச் சுற்றில் விளையாடும் வாய்ப்பை பெற்றுள்ள ஐஸ்லாந்து குழு டியில் சாதிக்கும் என்று கூறமுடியாது. லயனல் மெசி உட்பட அதி சிறந்த வீரர்களைக் கொண்ட ஆர்ஜன்டீனா கோல் மழை பொலிவதைத் தடுப்பதற்கான வியூகங்களை அமைப்பது குறித்து ஜஸ்லாந்து கூடுதல் கவனம் செலத்தும் என்பதில் சந்தேகமில்லை.

தரப்படுத்தலில் ஆர்ஜன்டீனா ஐந்தாம் இடத்திலும் ஐஸ்லாந்து 22ஆவது இடத்திலும் இருக்கின்றன. 

இந்த இரண்டு அணிகளுக்கும் இடையிலான போட்டி மொஸ்கோ ஸ்பார்ட்ட்டக் விளையாட்டரங்கில் இன்று இரவு 9.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

குரோஏஷியா எதிர் நைஜீரியா

உலகக் கிண்ண வரலாற்றில் முதல் தடவையாக சந்திக்கும் இந்த இரண்டு அணிகளில் எந்த அணி வெற்றிபெறும் என்று அனுமானிப்பது இலகுவான காரியமல்ல. எனினும் தரவரிசையில் நைஜீரியாவைவிட 28 இடங்கள் முன்னிலையில் 20ஆவது இடத்திலிருக்கும் குரோஏஷியா இப் போட்டியில் வெற்றிபெற முயற்சிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. குழு டியில் இடம்பெறும் இவ்வணிகளுக்கு இடையிலான போட்டி சரன்ஸ்க், மோர்ட்டோவியா விளையாட்டரங்கில் இன்று நள்ளிரவுக்குப் பின்னர் 12.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

(என்.வீ.ஏ.)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சென்னை சுப்பர் கிங்ஸை வீழ்த்தியது லக்னோவ்...

2024-04-19 23:59:54
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-20 00:04:00
news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41