மரணித்த கிளிநொச்சி இளைஞனுக்கு முப்பது இலட்சம் நட்டஈடு

Published By: Digital Desk 4

16 Jun, 2018 | 10:51 AM
image

கடந்த எட்டாம் திகதி தாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து மரணமான கிளிநொச்சி இளைஞனுக்கு முப்பது இலட்சம் ரூபாவினை ஓப்பந்த நிறுவனங்கள் நட்டஈடாக வழங்கியுள்ளன.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது

தாமரை கோபுரத்தின் கட்டுமானப் பணிகளில் ஈடுப்பட்டிருந்த கிளிநொச்சி அக்கராயன்குளத்தைச் சேர்ந்த கோணேஸ்வரன் நிதர்சன் எனும் மாணவன் கடந்த எட்டாம் திகதி   தாமரை கோபுரத்தின் 16 வது  மாடியில் மின் தூக்கி  பொருத்துவதற்காக விடப்பட்டிருந்த பகுதிக்குள்  சென்று கீழே வீழ்ந்ததில்  மரணமடைந்திருந்தார்.

சீனா மற்றும் இலங்கையை சேர்ந்த இரண்டு ஒப்பதந்த நிறுவனங்கள் தாமரை கோபுரத்தின் கட்டுமானப்பணிகளில் ஈடுப்பட்டு வருகின்றன. எனவே மரணமான இளைஞனுக்கு குறித்த நிறுவனங்கள் இணைந்து காப்புறுதி பணம் மற்றும் நிறுவன பங்களிப்பு என்பனவாக முப்பது இலட்சம் ரூபாவினை வழங்கியுள்ளனா்.

குறித்த பணத்தை மரணமான நிதர்சனின் இரண்டு சகோதரிகள் மற்றும் சகோதரன்  ஆகியோரின் பெயரில் நிலையான வைப்பில் வங்கியில் வைப்புச் செய்துள்ளனா் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனா்.

நிதர்சின் குடும்பத்தினருக்கு  மீள் குடியேறி இதுவரை காலமும் அரசின் நிரந்தர வீட்டுத்திட்டம் வழங்கப்படவில்லை.என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59