சட்டவிரோதமாக தங்கியிருந்த 19 ஆயிரம் பேர் கைது

Published By: Digital Desk 4

16 Jun, 2018 | 10:22 AM
image

மலேசியாவில் கடந்த 5 மாதங்களில் சட்டவிரோதமாக தங்கியிருந்த பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 19,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மலேசிய அரசு வெளிநாட்டுத் தொழிலாளர்களை முறைப்படுத்தும் நடவடிக்கையில் கடந்த ஆண்டு முதல் ஈடுபட்டு வருகிறது. பதிவுச்செய்யப்படாத தொழிலாளர்கள் மீது பல்வேறு விதமான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. அதன்படி கடந்த மார்ச் மாதம் 4,000 இந்தோனேசிய தொழிலாளர்களை நாடு கடத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 

பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள நாடுகளை குறி வைக்கும் மலேசிய நிறுவனங்கள், ஆட்கடத்தல்காரர்கள் வழியாக அப்பகுதிகளிலிருந்து ஆட்களை அழைத்து வருகின்றனர். 

இவர்கள் கட்டுமானத்துறை, தேயிலைத் தோட்டங்கள், தொழிற்சாலைகளில் குறைந்த ஊதியத்திற்கு ஆபத்தான கடுமையான வேலைகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். லாபத்தை மட்டுமே மையமாகக் கொண்ட நிறுவனங்கள் வேலைக்கு அமர்த்துபவர்கள் இவர்களை எந்தவித ஆவணங்களுமின்றி பணியில் வைத்துள்ளனர். 

இந்நிலையில், சட்டவிரோதமாக மலேசியாவில் தங்கியிருந்த பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 19,000 பேர் கடந்த 5 மாதங்களில் கைது செய்யப்பட்டுள்ளதாக மலேசிய குடிவரவுத்துறையின் இயக்குனர் ஜெனரல் தடுக் செரி முஸ்தபர் அலி தெரிவித்துள்ளார். 

முறையான பயண ஆவணங்கள் இல்லாதவர்கள், சுற்றுலா மற்றும் மாணவர் விசாவில் வந்து வேலை செய்து கொண்டிருந்தவர்கள் என பலர் கைதாகியுள்ளதாக கூறப்படுகிறது. இதில் பலர் மசாஜ் மையங்களில், விபச்சார விடுதிகளிலிருந்து கைது செய்யப்பட்டதாகவும் தெரிவித்திருக்கிறார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17