ஜப்பானின் முன்னாள் பிரதமர் யுக்கியோ ஹடோயாமாவுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்குமிடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இது குறித்து ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஜப்பானிய முன்னாள் பிரதமர் யுக்கியோ ஹடோயாமாவின் தனிப்பட்ட நிதி அன்பளிப்பினால் பொல்கஸ்சோவிட்ட தஹம் செவன விகாரையின் சர்வதேச பெளத்த நிலையத்தில் நிர்மாணிக்கப்படவுள்ளது. இதற்கான மொத்த செலவு 2500 கோடி ரூபாவாகும். 

தற்போது இங்கு ஆங்கிலம் மற்றும் ஜப்பானிய மொழிகள் கற்பிக்கப்படுகின்றன. எதிர்காலத்தில் இங்கு தொழிற்பயிற்சி நிலையம் ஒன்றிணையும் ஆரம்பிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

இலங்கையின் போக்குவரத்து நெருக்கடியையும் சுத்தமான குடிநீரை பெற்றுக் கொடுப்பதற்கான செயற்றிட்டத்துக்கும் பங்களிப்பு வழங்குவோம் என ஜப்பானிய முன்னாள் பிரதமர் ஜனாதிபதியிடம் தெரிவித்தார்.

பொல்கஸ்சோவிட்ட தஹம் செவன விகாரையின் சர்வதேச பெளத்த நிலையத்தில் புதிதாக நிர்மாணிக்கப்படும் சதஹம் சேவா கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டும் புண்ணிய நிகழ்வில் கலந்து கொள்ளவே யுக்கியோ ஹடோயாமா இலங்கை வந்தமை குறிப்பிடத்தக்கது.