புனித கப்பலேந்திய மாதா ஆலயம் மீது தாக்குதல் ; மன்னார் பொலிஸில் முறைப்பாடு

Published By: Priyatharshan

15 Jun, 2018 | 05:36 PM
image

மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி பெரிய கருசல் பகுதியில் அமைந்துள்ள புனித கப்பலேந்திய மாதா ஆலயத்தில் முகப்பில் வைக்கப்பட்டிருந்த மாதா திருச் சொரூபத்தின் கண்ணாடிகள் இனம் தெரியாத நபர்களினால் நேற்று வியாழக்கிழமை உடைக்கப்பட்டு சேதமாக்கப்பட்டுள்ளதாக சின்ன கருசல் கிராம மக்கள் இன்று வெள்ளிக்கிழமை மதியம் மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

பெரிய கருசல் பகுதியில் அமைந்துள்ள புனித கப்பலேந்திய மாதா ஆலயத்தில் முகப்பில் வைக்கப்பட்டிருந்த மாதா  திருச் சொரூபத்தின் கண்ணாடிகள் இனம் தெரியாத நபர்களினால் உடைக்கப்பட்டுள்ளமை குறித்து நேற்று வியாழக்கிழமை மாலை ஆலயத்திற்கு சென்ற கிராமத்தவர்கள் அவதானித்த நிலையில் குறித்த சம்பவம் தொடர்பாக சின்ன கருசல் பங்குத்தந்தை இ.செபமாலை அடிகளாருக்கு  தகவல் வழங்கியுள்ளனர்.

இந்த நிலையில் இன்று வெள்ளிக்கிழமை காலை ஆலய நிர்வாகத்தினர் ஆலத்திற்கு சென்று பார்த்த போது குறித்த சொரூபம் வைக்கப்பட்டிருந்த பேழையின் கண்ணாடி கற்கள் வீசப்பட்டு உடைக்கப்பட்டுள்ளமையினை அவதானித்துள்ளனர். மேலும் வீசப்பட்ட கல்லும் சிறிய ரீப்பை துண்டும் சம்பவ இடத்தில் இருந்து மீட்டுள்ளனர்.

மேலும் ஆலயத்தின் தற்போது   நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் ஆலையத்திற்கு சொந்தமான காணியின் கம்பிகள் வெட்டப்பட்டுள்ளதையும் அவதானித்துள்ளனர். உடனடியாக குறித்த இரு சம்பவங்கள் தொடர்பாக மன்னார்  பொலிஸ் நிலையத்தில் இன்று வெள்ளிக்கிழமை மதியம்  ஆலய சபையினர் முறைப்பாட்டினை பதிவு செய்துள்ளனர்.

குறித்த இரு சம்பவங்கள் தொடர்பாக மன்னார் ஆயரின் கவனத்திற்கும் கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும் இவ்வாறான பிரச்சினைகள் குறித்த பிரதேசத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றதாகவும்  குறித்த சம்பவங்களுடன் ஈடு படுகின்றவர்களுக்கு எதிராக   பொலிஸார்  சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும்   மக்கள் தெரிவித்ததோடு, ஆலயம் மற்றும் ஆலய சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தியமை தொடர்பாக பல்வேறு வழக்கு விசாரணைகள் நீதிமன்றத்தில் காணப்படுகின்ற போதும் குறித்த சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றமை வேதனையை ஏற்படுத்துவதாக பாதிக்கப்பட்ட சின்னக்கருசல் மக்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27