( கலைச்செல்வன்)

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளர் ஹேமந்த தேவப்பிரிய தனது பதவியை  இராஜினாமா செய்துள்ளார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு 2 வருட ஒப்பந்த அடிப்படையில் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இவருக்கு நியமனம் வழங்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர் தற்போது இராஜிநாமா செய்துள்ளார்.

இந்நிலையில், உலகக்கிண்ண மகளிர் இருபதுக்கு - 20 போட்டிகள் மேற்கிந்தியத்தீவுகளில் இடம்பெற இன்னும் 5 மாதம் உள்ள நிலையில் ஹேமந்த தேவப்பிரிய தனது தனிப்பட்ட காரணங்களால் பதவியை  இராஜினாமா செய்துள்ளார்.

இந்த முடிவால் இலங்கை மகளிர் அணியினர்  சிறந்த பயிற்றுவிப்பாளரை இழந்துள்ளமை குறிப்பிடத்தக்கவிடயாமாகும்.