(ரி.விரூஷன்)

யாழ். வட்டுக்கோட்டை தனியார் பாடசாலையின் ஆசிரியர் ஒருவர் பதின்ம வயது மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த ஆசிரியர் வட்டுக்கோட்டையிலுள்ள  தனியார் பாடசாலையில் கற்பித்து வருவதுடன் அங்கு கல்வி கற்கும் மாணவிகளை தனியார் வகுப்பிற்கு வருமாறு கட்டாயப்படுத்தியுள்ளார். இவ்வாறு தனியார் வகுப்பிற்கு வருகை தந்த மாணவிகள் சிலர் மீது பாலியல் துஷ்பிரயோகமும் மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில் இது தொடர்பாக சங்கானை பிரதேச செயலக சிறுவர் பாதுகாப்பு பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கிணங்க அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதுடன் பாதிக்கப்பட்ட மாணவிகள் மூவரது வாக்குமூலங்களையும் பதிவு செய்திருந்தனர்.

இதனையடுத்தே வட்டுக்கோட்டை பொலிஸார் அவரை கைதுசெய்து நேற்று மல்லாகம நீதிமன்றல் ஆஜர்படுத்தியபோது நீதிவான் அவரை தொடர்ந்து 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.