வவுனியாவில் இன்று காலை புதையல் தோண்டச் செனற நாள்வரை பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வவுனியாவில் இன்று காலை அதிரடிப்படையினர் கண்டி வீதியில் சென்ற சொகுசு கார் ஒன்றினை வழிமறித்த போது நிறுத்தாமல் சென்ற வாகனத்தைத் தொடர்ந்து துரத்திச் சென்று வழிமறித்தபோது அதில் பயணித்த நான்கு பேரைக் கைது செய்துள்ளதாகவும் அவர்களிடமிருந்து நிலத்தடியில் புதையல் தோண்டும் ஸ்கானர் ஒன்றறையும் கைப்பற்றியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், வவுனியா நொச்சிமோட்டைப்பாலத்திற்கு அருகில் இன்று காலை சந்தேகத்திற்கிடமான சொகுசு கார் ஒன்றினை வழிமறித்த சிறப்பு அதிரடிப்படையினர் குறித்த கார் நிறுத்தாமல் சென்றுள்ளனர்.

இதையடுத்து அதனைத்துரத்திச் சென்று வழிமறித்து சோதனை மேற்கொண்டபோது அதில் நான்கு பேர் பயணித்துள்ளதுடன் நிலத்தடியில் புதையல்தோண்டுவதற்குப் பயன்படுத்தப்படும் ஸ்கேனர் ஒன்றயையும் கைப்பற்றியுள்ளனர். கைது செய்யப்பட்ட நால்வரையும் சொசுகு கார் என்பனவற்றையும் இன்று காலை 10மணியளவில் வவுனியா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

இதையடுத்து பொலிசார் மேலதிக விசாரணைகள் மேற்கொண்டு வருவதுடன் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட அனைவரும் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.