வடக்கில் நுண்நிதி நிறுவனங்களின் செயற்பாட்டுக்கு எதிராக பெண்கள் உட்பட பல பொதுமக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்திவருகின்ற நிலையில் குறித்த ஆர்ப்பாட்டம் தொடர்பில் செய்தி சேகரித்த முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர் ஒருவருக்கு முல்லைத்தீவு நகரில் இயங்கும்  நுண்கடன் வழங்கும் நிறுவன ஊழியரால் அச்சுறுத்தல் விடுக்கபட்டுள்ளது.

 

நேற்றையதினம் முல்லைத்தீவு நகரில் நுண் கடன் திட்டங்களுக்கு எதிராகவும் நுண் நிதி நிறுவனங்களுக்கு எதிராகவும் அதனால் பாதிக்கபட்ட பெண்கள் இணைந்து மாபெரும் கண்டன ஆர்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர்.

 

இந்தநிலையில் குறித்த கவனயீர்ப்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்களை முல்லைத்தீவு நகரில் இயங்கும் பிரபல நுண்நிதிநிறுவன ஊழியர்கள் புகைப்படம் எடுத்து அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் செயற்பட்டதாக போராட்டத்தில் கலந்துகொண்டிருந்த மக்கள் விசனம் வெளியிட்டிருந்தனர்.

இதனை பதிவு செய்து செய்தியாக வெளியிட்ட முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த  சுதந்திர ஊடகவியலாளரான கணபதிப்பிள்ளை குமணன் என்பவருக்கு  குறித்த புகைப்படம் எடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட நுண்நிதி நிறுவன ஊழியர் ஒருவரால் வீதியில் மறித்து அச்சுறுத்தல் விடுக்கபட்டுள்ளது.

இதனை தொடர்ந்து குறித்த ஊடகவியாலரால் அச்சுறுத்தல் விடுத்த நுண் நிதி நிறுவன ஊழியருக்கு எதிராக முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதியபட்டுள்ளது.

வவுனியா மாவட்ட சிவில் சமூகம்

நுண்­நிதி கடன் செயற்­பாட்­டினால் அசௌ­க­ரி­யங்­களை எதிர்நோக்கும் சமூ­கங்­களை பாது­காப்­பது தொடர்­பாக அர­சுக்கும் இலங்கை மத்­திய வங்­கிக்கும் தொடர் அழுத்­தத்தை கொடுக்கும் முக­மாக வவு­னியா மாவட்ட சிவில் சமூக அமைப்­புகள் மற்றும் பெண்கள் சுய உத­வி கு­ழுக்­க­ளினால் கவ­ன­யீர்ப்பு பேரணி ஒன்று முன்­னெ­டுக்­கப்­பட்­டது.

வவு­னியா பழைய பேருந்து நிலை­யத்தில் ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்ட ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்கள் பின்னர் அங்­கி­ருந்து ஊர்­வ­ல­மாக கடை வழி­யி­னூ­டாக வவு­னியா மாவட்ட செய­ல­கத்­தினை சென்­ற­டைந்­தனர்.

பின்னர் மாவட்ட செய­ல­கத்­திற்கு முன்­பாக ஆர்ப்­பாட்­டத்தில் ஈடுபட்ட அவர்கள் மாவட்ட செய­ல­கத்­திற்கு சென்று மாவட்ட செய­லக நிர்­வாக உத்­தி­யோ­கத்­த­ரிடம் ஆளு­நருக்கும், அர­சாங்க அதி­ப­ருக்­கு­மான மக­ஜ­ரொன்­றி­னையும் கைய­ளித்­தனர்.

இதன்போது  வட்­டிக்கு வட்டி, இரத்து செய்து வாழ­வி­டுங்­கள் ஏழை­களின் உணர்வை புரிந்து கொள்; பெண்­க­ளுக்கு கடன் திட்­டமா தற்­கொ­லைக்கு திட்­டமா நாங்­களும் மனி­தர்­களே; மரி­யா­தை­யுடன் அணுகுங்கள் நுண் நிதி கடன் சுமை குடும்பங்கள் சீரழிவு போன்ற பதாதைகளையும் கோஷங்களையும் எழுப்பியிருந்தனர்.

கிளிநொச்சியில் கவனயீர்ப்பு பேரணி

கிளி­நொச்­சியில் நுண் நிதி ­கடன் செயற்­பாட்­டினால் அசௌ­க­ரி­யங்­களை எதிர்­கொள்ளும் சமூ­கத்­தையும் பெண்­க­ளையும் பாது­காக்கும் வகை­யிலும் நுண்­கடன் செயற்­பாட்டின் பொறிக்குள் சிக்­கி­யி­ருக்கும் மக்­களை விடு­விக்கும் வகை­யிலும் அர­சாங்­கத்­திற்கும் மத்­திய வங்­கிக்கும் அழுத்­தங்­களை கொடுக்கும் வகை­யிலும் கவ­ன­யீர்ப்பு பேரணி ஒன்று நேற்று  கிளி­நொச்­சியில் முன்­னெடுக்கப்­பட்­டது.

கிளி­நொச்சி மாவட்ட சிவில் சமுக அமைப்­புகள் கிளி­நொச்சி அரச மற்றும் சிவில் சமுக அமைப்­புகளின் சம்­மே­ளனம் ஆகி­யன ஏற்­பாடு செய்த இப் ­பே­ரணி காலை 10மணிக்கு கிளி­நொச்சி கர­டிப்­போக்கு சந்­தியில் இருந்து ஆரம்­ப­மாகி மாவட்ட செய­லகம் வரை சென்­ற­டைந்­தது.

கடந்த ஆண்­டு­களில் நுண் நிதி செயற்­பா­டுகள் மூலம் நன்­மைகள் ஏற்­பட்­டி­ருந்­தாலும் தற்­போது இது ஒரு பாரிய சவாலாக மாறியுள்ளது., தற்கொலைகளும் அதிகரித்து காணப்படுகின்றன.

முல்லைத்தீவில் கிளர்ந்தெழுந்த மக்கள்

முல்­லைத்­தீவு மாவட்­டத்தில் போருக்­கு­ பின்னர் குறிப்­பாக பெண்கள் எதிர்­கொள்ளும் பாரிய பிரச்சி­னை­யான  நுண்­நி­தி ­கடன் திட்­டங்­க­ளுக்கு எதி­ரா­கவும் நுண் கடன் வழங்கும் நிறு­வ­னங்­க­ளுக்கு எதி­ரா­கவும்   அமை­தி­யான முறையில் மக்கள் ஆர்ப்­பாட்ட பேரணி ஒன்­றினை நேற்று  காலை முன்­னெ­டுத்­­தி­ருந்­தனர்.

நுண்­நிதி கடன் செயற்­பாட்­டினால் அசௌ­க­ரி­யங்­களை எதிர்­நோக்கும் சமூ­கங்­களை பாது­காக்கும் நோக்கில் குறிப்­பாக பெண்­களை பாது­காக்­கவும், இந்­நுண்­நி­தி ­கடன் செயற்­பாட்டில் பொறிக்குள் சிக்கி இருக்கும் மக்­களை விடு­விக்கும் செயற்­பா­டு­களை மேற்­கொள்­ளவும் அர­சாங்­கத்­திற்கும் இலங்கை மத்­திய வங்­கிக்கும் தொடர் அழுத்தம் கொடுக்­கும் ­வ­கையில் கவ­ன­யீர்ப்பு பேரணி இடம்பெற்றது.

முல்­லைத்­தீவு மாவட்ட சிவில் சமூக அமைப்­புக்கள் மற்றும் சிவில் சமூக வலை­ய­மைப்பின் ஏற்­பாட்டில் நேற்று காலை முல்­லைத்­தீவு சுனாமி நினை­வா­ல­யத்தில் இருந்து கவ­ன­யீர்ப்பு பேர­ணி­ முல்­லைத்­தீவு நகர் பகுதி ஊடாக மாவட்ட செய­லகத்­தினை சென்­ற­டைந்­தது.

இவ்­வாறு  பேரணியில்  சென்ற மக்­களை முல்­லைத்­தீவு நகரில் இயங்­கி­ வரும் பிர­ப­ல­மான  ஒரு நுண்கடன் வழங்கும் நிறு­வ­னத்தின் ஊழி­யர்கள் ஒளிப்­படம் எடுத்து பெண்­களை அச்­சு­றுத்தும் செயற்­பாட்டில் ஈடு­பட்­டுள்­ளதை அவ­தா­னிக்­க ­மு­டிந்தது. இதனை போராட்­டத்தில் ஈடு­பட்ட மக்கள் அவ­தா­னித்து தாம் குறித்த நிறு­வ­னத்தில் கடன்­களை பெற்­றுள்­ள­தா­கவும் இவ்­வாறு நுண்­கடன் திட்­டங்­க­ளுக்கு எதி­ராக ஆர்ப்பாட்டம் மேற்­கொள்ளும் போது குறித்த நிறு­வ­னத்­தினர் தம்மை அச்­சு­றுத்தும் வித­மாக புகைப்­படம் எடுத்து நடந்து கொண்­ட­தாக கவலை தெரி­வித்­தனர்.

இனி­வரும் நாட்­களில் இந்த புகைப்­ப­டங்­களை வைத்து குறித்த நிறு­வ­னத்தில் தாம் பெற்ற கடன்­களை திரும்ப செலுத்­தும் ­போது அந்த நிறு­வன ஊழி­யர்­களால் அழுத்­தங்­க­ளுக்கு உட்­ப­டுத்தப்படலாம் என்ற அச்சம் ஏற்­பட்­டுள்­ள­தா­கவும் ஆர்ப்பாட்­டத்தில் ஈடு­பட்ட பெண்­களில் சிலர்  தெரி­வித்­தனர்.

குறிப்­பாக முல்­லைத்­தீவு மாவட்­டத்தில் முல்­லைத்­தீவு நகர் ­ப­கு­தியில் 8க்கு  மேற்­பட்ட நுண் ­நிதி கடன் வழங்கும் தனியார் நிறு­வ­னங்கள் செயற்­பட்டு வரு­கின்­றன. இதனால்  நாள்­தோறும் பல பெண்கள் பல்­வேறு பிரச்சி­னை­களை சந்­தித்து வரு­கின்­றார்கள்.

குறிப்­பாக இவ்­வாறு கடன் வழங்கும் நிறு­வ­னங்கள் பெண்­க­ளிடம் சென்று குழுக்­க­ளாக சேர்த்து ஆசை வார்த்தை காட்டி கடன்களை வழங்கி வருவதாக பெண்கள் குற்றம் சாட்டியுள்ளார்கள். இந்த நிறுவனங்களின்  முகவர்களாக செயற்படும் கடன் அறவிடும் ஊழியர்கள் பலர் பல பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளதையும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

மன்னாரில் ஆர்ப்பாட்டத்திலீடுபட்ட மக்கள்

நுண் நிதிக்கடன் செயற்பாட்டினால் பாதிக்கப்படும் மக்களையும் குறிப்பாக பெண்களை பாதுகாக்கவும், நுண் நிதிக் கடன் செயற்பாட்டின் பொறிக்குள் சிக்கியிருக்கும் மக்களை உடனடியாக விடுவிக்கும் செயற்பாடுகளை மேற்கொள்ளவும் அரசாங்கத்திற்கும், இலங்கை மத்திய வங்கிக்கும் தொடர் அழுத்தம் கொடுக்கும் முகமாக மன்னாரில் நேற்று வியாழக்கிழமை காலை கவனயீர்ப்புப் பேரணி இடம் பெற்றது.
மன்னார் மாவட்ட சிவில் சமூக அமைப்புக்கள் மற்றும் நல்லாட்சிக்கான பெண்கள் அமைப்பின் ஏற்பாட்டிலும்,மன்னார் மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையத்தின் ஒருங்கிணைப்பில் நேற்று வியாழக்கிழமை காலை 10.30 மணியளவில் மன்னார் தனியார் பேரூந்து தரிப்பிடத்திற்கு முன் பேரணி ஆரம்பமாகி மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் நிறைவடைந்தது.
குறித்த பேரணியில் பெண்கள் அமைப்புக்கள்,பொது அமைப்புக்கள்,பொது மக்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர். பேரணியில் கலந்து கொண்டவர்கள் நுண் நிதிக்கடன் தொடர்பில் பல்வேறு வசனங்கள் எழுப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு பேரணியில் கலந்து கொண்டனர்.
கவனயீர்ப்பு பேரணியின் முடிவில்  அரசாங்கத்திற்கும், இலங்கை மத்திய வங்கிக்கும் தொடர் அழுத்தம் கொடுக்கும் வகையில் கோரிக்கை அடங்கிய மகஜர் மன்னார் மாவட்ட செயலகத்தின் பிரதம கணக்காளரிடம் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.