(கலைச்செல்வன்)

கரந்தெனிய பிரதேச சபையின் பிரதி தவிசாளரின்  கொலையுடன் தொடா்புடைய பிரதான  சூத்திரதாரியை கைதுசெய்துள்ளதாக பொலிஸ் பேச்சாளா் தெரிவித்தார்.

 

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் பிரபல பாதாள உலகக் குழுத்தலைவர் கொஸ்கட சுஜியின் உதவியாளா் என பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர் கரந்தெனிய பிரதேச சபையின் பிரதி தவிசாளரின்  கொலையுடன் தொடர்புடைய முக்கிய சூத்திரதாரியெனவும் இவரை வேரகொட, மீட்டியாகொட பொலிஸ் பிரிவில் வைத்து கைது செய்துள்ளதாகவும் தெரிவித்தனா். 

தொடர்புடைய செய்திகளுக்கு,

பிரதேச சபையின் பிரதி தவிசாளர் சுட்டுக்கொலை

கரந்தெனிய துப்பாக்கி சூடு : பிரதேச சபையின் பிரதித் தவிசாளர் பலி : பொலிஸாரின் வலையில் சிக்கிய சந்தேக நபர்