சீனாவின் கியுசு மாகாணத்தில் புறா தலையுடன் கூடிய அதிசய மீனின் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. 

சீனாவின் கியுசு மாகாணத்தில் உள்ள குயாங் நகரில் வித்தியாசமான மீன் ஒன்றை அப்பகுதி மீனவர் பிடித்துள்ளார்.அந்த விசித்திர மீனை காண்பதற்கு மக்கள் அலைமோதினர்.

தண்ணீரில்லாமல்  வெளியில் வைத்து பார்க்கப்பட்டதால், அ்த  மீன் சிறிது நேரத்திலே உயிரிழந்துள்ளது. இருப்பினும் இந்த வகை விசித்திர மீனைக் கண்ட அப்பகுதி மக்கள் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர். 

 கிராஸ் கார்ப் என்றழைக்கப்படும் இந்த வகை மீன்கள் சுத்தமான தண்ணீரில் மட்டுமே வாழும் தன்மை கொண்டது எனவும், ஆசியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் இது காணப்படும் என்று கூறப்படுகிறது.