தொழிலாளர்கள் அடையாள வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம் 

Published By: Daya

14 Jun, 2018 | 04:08 PM
image

(க.கிஷாந்தன்)

தலவாக்கலை - லோகி தோட்டம் மிடில்டன் பிரிவில், தோட்ட நிர்வாகத்திற்கு எதிராக அத்தோட்டத்தை சேர்ந்த 100 க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் இன்று அடையாள வேலை நிறுத்ததில்  ஈடுப்பட்டனர்.

உரிமைகள் மற்றும் சலுகைகள் தமக்கு பெற்றுக்கொடுக்கவில்லை என தெரிவித்தே ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

 தாம் முருங்கை மரம் வெட்டுவதற்கு ஒப்பந்த அடிப்படையில் தமக்கு பெற்றுக்கொடுக்கப்பட்ட வேலைக்கு இதுவரை தோட்ட நிர்வாகத்தினால் கொடுப்பனவு வழங்கப்படவில்லை.

 தோட்ட நிர்வாகம் தேயிலை தோட்டங்களை காடுகளாக்கி சுத்தம் செய்ய நடவடிக்கைகளை எடுக்காது 18 கிலோவுக்கு அதிகமான தேயிலை கொழுந்தினை கொய்து தரும்படி வழியுறுத்துகின்றனர்.

 எனவே இந்த விடயத்தில் தோட்ட நிர்வாக அதிகாரிக்கும், தொழிலாளர்களுக்கும் இடையில் வாக்குவாதமும் முறுகள் நிலையும் தோன்றியுள்ளது.

பலமுறை தோட்ட அதிகாரி தொழிலாளர்களை தரகுறைவாக பேசுவதாகவும், அடாவடி தனமாக நடந்துக் கொள்வதாகவும் தெரிவித்தே இந்த ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டதாக தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

 குறித்த விடயத்தில் தொழிற்சங்கங்கள், மற்றும் சம்மந்தப்பட்டவர்கள் தீர்க்கமான முடிவினை துரிதமாக பெற்றுத்தர வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மேலும் தெரிவித்தனர்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இரு பெண்களின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்பு...

2024-04-18 09:45:24
news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41