(இரோஷா வேலு)

வெளிநாட்டில் சிகரெட்டுகள் மற்றும் மதுபான போத்தல்களுடன் இந்திய பிரஜைகள் ஐவர் இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய பொலிஸாரால் கைதுசெய்யப் பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

இது குறித்து பொலிஸார் தெரிவித்தாவது, 

இந்தியாவிலிருந்து சட்டவிரோதமான முறையில் கடத்திவரப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகள் மற்றும் மதுபான போத்தல்களுடன் இந்திய பிரஜைகள் ஐவர் இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டனர்.

குறித்த சம்வத்தில் இந்தியாவைச் சேர்ந்த 37,38,35 மற்றும் 34 வயதுடைய ஐந்து சந்தேகநபர்களே கைதுசெய்யப்பட்டனர். இவர்களை கைதுசெய்த வேளையில் அவர்களிடமிருந்து வெளிநாட்டு மதுபான போத்தல்கள் 45 மற்றும் வெளிநாட்டு சிகரெட்டுக்கள் 2200 கைப்பற்றப்பட்டுள்ளன. 

இவர்கள் ஐவரும் சந்தேகத்திற்கிடமாக விமான நிலையத்திலிருந்து வெளியேறமுற்பட்ட வேளையி லேயே, சட்டவிரோதமாக அனுமதிபத்திரம் ஏதுமின்றி இந்தியாவிலிருந்த கடத்தி வரப்பட்ட வெளி நாட்டு சிகரெட்டுகள் மதுபான போத்தல்களுடன் கைதுசெய்யப்பட்டனர். 

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட ஐவரையும் இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டிருந்தனர். இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணை களை விமான நிலைய பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.