பாடசாலை சீருடைக்கு பதிலாக வவுச்சர்கள் ஏன்?

20 Nov, 2015 | 11:39 AM
image

கடந்த காலத்தில் மாண­வர்­களின் பாட­சாலை சீருடை துணி­களை வழங்­கு­வ­திலும் பாரிய கொள்ளை இடம்­பெற்­றுள்­ளது. முன்­னைய அர­சாங்கம் சீருடை துணி மாபி­யா­வையே செய்­துள்­ளது. அதை தடுக்­கவே சீருடை துணி­க­ளுக்கு பதி­லாக நிதி வவுச்­சர்­களை வழங்க தீர்­மா­னித்­துள்­ள­தாக கல்வி அமைச்சர் அகி­ல­விராஜ் காரி­ய­வசம் தெரி­வித்தார்.

akila

400ரூபாய் தொடக்கம் 1700 ரூபாய் வரையில் மாண­வர்­களின் சீருடை துணி­க­ளுக்­கான நிதி வவுச்­சர்­களை வழங்க தீர்­மா­னித்­து­ள­தா­கவும் அவர் குறிப்­பிட்டார்.அர­சாங்க தகவல் திணைக்­க­ளத்தில் நேற்று நடை­பெற்ற அமைச்­ச­ரவை தீர்­மா­னங்­களை வெளி­யிடும் வாராந்த செய்­தி­யாளர் சந்­திப்பின் போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அவர் மேலும் கூறு­கையில்,

அரச பாட­சா­லை­களில் மாண­வர்­க­ளுக்கு இல­வ­ச­மாக சீருடை துணி­களை வழங்­கு­வது வழ­மை­யான ஒன்­றா­கவே காணப்­ப­டு­கின்­றது. இந்த முறைமை எமது ஐக்­கிய தேசியக் கட்­சியின் ஆட்­சிக்­கா­லத்தில் தான் முன்­னெ­டுக்­கப்­பட்­டது. எனினும் கடந்த காலங்­களில் இந்த விவ­காரம் தொடர்பில் பல பிரச்­சி­னைகள் காணப்­பட்­டன. எனினும் நான் கல்வி அமைச்­ச­ராக நிய­மிக்­கப்­பட்ட பின்னர் இந்த சிக்கல் தொடர்பில் முக்­கி­யத்­துவம் கொடுத்து தேடிப் பார்த்தேன். 42 இலட்சம் மாண­வர்கள் இந்த இல­வச பாட­சாலை சீருடை துணி­களை பெற்­றுக்­கொள்­கின்­றனர் . எனினும் இந்த தொகையை வழங்­கு­வ­தாக குறிப்­பிட்­டாலும் இதில் 25வீத­மா­னது மாண­வர்­க­ளுக்கு இது பய­னற்­ற­தா­கவே காணப்­ப­டு­கின்­றது. அதேபோல் தரம் குறைந்த சீரு­டை­களை கடந்த காலங்­களில் வழங்­கப்­பட்­டுள்­ளது.

இது தொடர்பில் மூன்று நிறு­வ­னங்­களின் மூல­மாக பரி­சோ­தனை ஒன்­றையும் மேற்­கொண்டேன். அதன் அடிப்­ப­டையில் சரி­யான வகையில் இந்த சீரு­டை­களை மாண­வர்­க­ளுக்கு வழங்­க­வில்லை என்­பது கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது. இந்த சீருடை விட­யத்­திலும் மிகப்­பெ­ரிய கொள்ளை இடம்­பெற்­றுள்­ளது. ஆகவே இப்­போது நாம் மாற்று நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள தீர்­மானம் எடுத்தோம். எனவே இனி­வரும் காலங்­களில் மாண­வர்­க­ளுக்கு சீருடை துணி­களை வழங்­கு­வ­தற்கு பதி­லாக நிதி வவுச்­சர்­களை வழங்­கு­வது என்ற தீர்­மா­னத்தை மேற்­கொண்டு அமைச்­ச­ரவைன் அங்­கீ­கா­ரத்­தையும் பெற்­றுள்ளோம்.

அமைச்­ச­ர­வையில் இந்த விவ­கா­ரங்­களை நாம் முன்­வைத்து பூரண தெளி­வூட்­டலை வழங்­கிய பின்னர் அமைச்­ச­ர­வையில் அனை­வரும் ஏற்­றுக்­கொண்­டுள்­ளனர். இந்த முறை­மையில் எமக்கு உள்ள சாத­க­மான விளை­வுகள் அதி­க­மாகும். இதில் 2015ஆம் ஆண்­டுக்­கான சீருடை விநி­யோகம் அதற்கு முன்­னைய ஆண்டு நடை­பெற்­றுள்­ளது. அப்­போ­தைய விலைக்கு அமைய அர­சாங்கம் 2300 மில்­லியன் ரூபாய்­களை செலவு செய்­துள்­ளது. இந்­த­ளவு தொகை பணத்தை செல­விட்டும் மாண­வர்­களின் சீருடை பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வை பெற்­றுக்­கொ­டுக்க முடி­யாமல் போயுள்­ளது.

எனினும் இப்­போது நாம் முன்­னெ­டுத்­துள்ள முறை­மையில் அவ்­வா­றான எந்­த­வித பிரச்­சி­னையும் ஏற்­ப­டாது. குறிப்­பாக சீரு­டைகள் வழங்கும் முறை­மையில் மூன்று கட்­ட­மைப்­புக்கு அமை­யவே வழங்­கப்­ப­டு­கின்­றன. இதில் 1-5 ஆம் வகுப்­பு­க­ளுக்கு ஒரு கட்­ட­மைப்பின் கீழும் 6-10ஆம் வகுப்­புகள் வரையில் இரண்டாம் கட்­ட­மைப்பின் கீழும் சாதா­ரண தரம் மற்றும் உயர்­தர மாண­வர்­க­ளுக்கு மூன்றாம் கட்­ட­மைப்பின் கீழும் தான் சீருடை துணிகள் வழங்­கப்­பட்­டன. இதில் மாண­வர்­களின் உயரம் பரு­ம­னுக்கு அமைய வழங்கும் துணி­களின் அளவில் சிக்கல் ஏற்­படும். அதேபோல் பரு­மனில் சிறிய மாண­வர்­க­ளுக்கு வழங்­கப்­படும் துணிகள் மீத­மா­கி­விடும். ஆகவே இதில் பாரிய நஷ்டம் ஏற்­படும். கடந்த காலங்­களில் இந்த சிக்கல் நிலைமை காணப்­பட்­டது.

ஆகவே இந்த முறை­மையில் உள்ள சிக்­கல்­களை தவிர்க்கும் வகையில் நாம் மாற்று நட­வ­டிக்­கை­களை ஆராய்ந்து தீர்­மானம் எடுத்­துள்ளோம். அதா­வது 1-5 ஆம் வகுப்பு மாண­வர்­க­ளுக்கு வழங்­கப்­படும் சீருடை துணியின் விலை மதிப்பு சந்தை பெறு­ம­தியின் அடிப்­ப­டையில் 350ரூபாய் ஆகும். எனினும் நாம் 400ரூபாய் நிதி வவுச்சர் வழங்­கு­கின்றோம். அதேபோல் 375ரூபாய் பெறு­ம­தி­யான துணி­களை பெற்­றுக்­கொள 400ரூபாய் நிதி வவுச்சர் வழங்­கு­கின்றோம். 470ரூபாய் பெறு­ம­தி­யான சீருடை துணிக்கு நாம் 600ரூபாய் தொகையை வழங்­கு­கின்றோம். அதேபோல் இந்த பாட­சாலை மாண­வர்­க­ளுக்­கான சீருடை வழங்­கு­வதில் அதி கூடிய தொகை பெளத்த பிக்கு மாண­வர்­க­ளுக்­கான காவி உடைக்­கா­கவே செல­வா­கின்­றது. இந்த தொகை 1700 ரூபாய். உயர் வகுப்பு மாண­வர்­களின் சீரு­டைக்கு 1000 ரூபாய் தொடக்கம் 1300 வரையில் செல­வா­கின்­றது. ஆகவே 400 ரூபாய் தொடக்கம் 1700 ரூபாய் வரையில் நாம் மாண­வர்­களின் சீருடை துணிக்­கான நிதி வவுச்­சர்­களை வழங்க தீர்­மா­னித்­துள்ளோம்.

இவ்­வாறு மாண­வர்­க­ளுக்கு வழங்கும் சீருடை துணிக்­கான நிதி வவுச்­சர்­களின் போதும் சாதா­ரண சந்தை விலையை விடவும் அதிக தொகையை நாம் வழங்க தீர்­மா­னித்­துள்ளோம். எமக்கு சில நிறு­வ­னங்­களை மாத்­திரம் கவ­னத்தில் கொண்டு மாண­வர்­களின் சீரு­டையில் கொள்­ளை­ய­டிக்க அனு­ம­திக்க முடி­யாது. அதேபோல் இவ்­வாறு நிதியை ஒதுக்­கி­னாலும் 500மில்­லியன் ரூபாய்கள் கல்வி அமைச்­சிற்கு எஞ்­சு­கின்­றது.

இந்த வவுச்சர்களை வழங்கும் போதும் பாடசாலை அதிபர் உரிய வகுப்பு ஆசிரியர், பெற்றுக்கொண்ட மாணவர்களின் கையொப்பம் என்பனவும் கவனத்தில் கொள்ளப்படும். அதேபோல் துணிகளை விற்கும் கடைகளின் உரிமையாளர்கள் கூட இந்த வவுச்சரில் உறுதிப்படுத்த வேண்டும். இவ்வாறு எந்த வகையிலும் சிக்கல் நிலைமைகள் ஏற்படாத வகையில் கவனமாக நாம் கையாண்டு வருகின்றோம். எந்த வகையிலும் எதிர்காலத்தில் சிக்கல்கள் ஏற்படாத வகையில் கையாள்கின்றோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02