மோட்டர் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மீது பஸ் வண்டி மோதியதில்  தாயும் மகளும்  பலியாகியுள்ளனர்.

இன்று காலை நுகேவெலயில் கணவன், மனைவி மற்றும் அவர்களது  இரண்டரை வயது மகளுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கோண்டிருந்த வேளையில் கடுகஸ்தோட்டையில் இருந்து குருணாகல் நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று மோதியதிலேயே குறித்த விபத்து நிகழ்துள்ளது.

குறித்த விபத்தில் படுகாயமடைந்த மூவரும் தித்தபாஜல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் 24 வயதுடைய தாயும் 2 1/2 வயது மகளும் உயிரிழந்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட மூவரும் அம்பன்பொல பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

விபத்து ஏற்படுத்திய பஸ் சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.