இலங்கை மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மேற்கிந்தியத் தீவுகளில் இடம்பெற்று வருகின்றது.

இத் தொடரின் முதலாவது போட்டி கடந்த 06 ஆம் திகதி போர்ட் ஒவ் ஸ்பெயினில் ஆரம்பமானது. இப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 226 ஓட்டங்களினால் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையிலுள்ளது. 

இந் நிலையில் தொடரின் இரண்டாது டெஸ்ட் போட்டி இன்று செய்ண்ட் லூசியாவிலுள்ள டரென் செமி கிரிக்கெட் மைதானத்தில் இரவு இலங்கை நேரப்படி 7.30 க்கு ஆரம்பமாகவுள்ளது. 

இப் போட்டியில் இலங்கை அணி சார்பில் தினேஷ் சந்திமல், நிரோஷன் டிக்வெல்ல, குசல் பெரேரா, மஹேல உடவத்த, குசல் மெண்டீஸ், தனஞ்சய டிசில்வா, ரொஷேன் சில்வா, தில்ருவான் பெரேரா, ரங்கன ஹேரத், சுரங்க லக்மால், லஹிரு குமார, அசித்த பெர்னாண்டோ, அகில தனஞ்சய, கசுன் ராஜித மற்றும் ஜெப்ரி வெண்டர்சே ஆகியோர் விளையாடுகின்றனர்.

மேற்கிந்திய அணி சார்பாக ஜோசன் ஹோல்டர், சேன் டோவ்ரிச், டேவோன் ஸ்மித், பிரத்வைட்,கெய்ரன் பவல், ஷாய்ஹோப், ரோஸ்டன் சேஸ், தேவேந்திர பிசோ, கேமர் ரோச், மிகுவேல் கம்மின்ஸ், சனோன் கேப்ரியல், ஜஹ்மர் ஹமில்டன் மற்றும் சிம்ரோன் ஹெட்மேயர் ஆகி‍யோர் களமிறங்கவுள்ளனர்.