நியூஸிலாந்து பிரதமர் இன்று வருகிறார்

Published By: Raam

23 Feb, 2016 | 08:03 AM
image

பொரு­ளா­தார மற்றும் அர­சியல் உற­வுகளை வலுப்­ப­டுத்தும் நோக்கில் நியூஸிலாந்து பிர­தமர் ஜோன் கீ மூன்று நாள் உத்­தி­யோ­க­பூர்வ விஜயம் ஒன்றை மேற்­கொண்டு இன்று இலங்கை வரு­கின்றார்.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க உள்­ளிட்ட வர்த்­தக சமூ­கத்­தி­னரை கொழும்பில் சந்­திக்கும் பிர­தமர் ஜோன் கீ இலங்­கையில் நியூசி­லாந்தின் புதிய முத­லீ­டுகள் தொடர்பில் கவனம் செலுத்த உள்ளார். அத்­துடன் அனைத்­து­லக ஜன­நா­யக ஒன்­றி­யத்தின் நிறை­வேற்று சபை கூட்­டத்­திற்கும் தலை­மைத்­தாங்க உள்ளார்.

நியூஸிலாந்து பிரதமர் எம்மை சந்­திப்­பது தொடர்பில் இது வரையில் உத்­தி­யோ­கப்­பூர்­வ­மாக எமக்கு அறி­விக்க வில்லை. அவர் மூன்று நாட்கள் இலங்­கையில் தங்­கி­ரு­யி­ருக்கும் நிலையில் சந்­திப்­பதற்கே வாய்ப்­புள்­ள­தா­கவும் எதிர் கட்சி தலைவர் இரா.சம்­பந்தன் தெரி­வித்தார்.

இலங்­கையில் காணப்­பட்ட உள் நாட்டு போர் கார­ண­மாக கடந்த 45 வரு­ட­கா­ல­மாக வலு­வான பொரு­ளா­தார மற்றும் அர­சியல் ரீதி­யி­லான தொடர்­பு­களை முன்­னெ­டுக்க முடி­யாமல் போயுள்ள நிலையில், தற்­போது அதற்கு சிறந்த சூழல் காணப்­ப­டு­வ­தா­கவும் இலங்கை விஜயம் தொடர்பில் நியூஸி­லாந்து பிர­தமர் அலு­வ­லகம் விடுத்­துள்ள அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

மேலும் கடந்த கால இழப்­பு­களில் இருந்து மீள்­வ­தற்கும் இலங்­கையின் நல்­லி­ணக்க பொறிமுறைக்கும் நியூஸிலாந்து அரசாங்கம் முழுமையாக ஒத்துழைப்பு வழங்கும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01