அபிவிருத்தி திட்டத்தை துரிதமாக அமைச்சரவையில் சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை

Published By: Daya

14 Jun, 2018 | 09:53 AM
image

கல்பிட்டியை அண்மித்த 13 தீவுகளுக்கான அபிவிருத்தி திட்டத்தை துரிதமாக அமைச்சரவையில் சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார். 

இப்பிரதேச மக்களின் அபிவிருத்தி பிரச்சினைகள் தொடர்பாக அவதானம் செலுத்தி, முக்கியத்துவங்களை இனங்கண்டு திட்டங்களை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி மாகாண முதலமைச்சர் தர்மசிறி தசநாயக்க மற்றும் உள்ளக அலுவல்கள், வடமேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் எஸ்.பி.நாவின்ன ஆகியோருக்கு பணிப்புரை விடுத்துள்ளார். 

நேற்று முற்பகல் புத்தளம் மதுரங்குளி மேர்ஸி கல்வி மையத்தில் இடம்பெற்ற கிராமசக்தி வடமேல் மாகாண செயற்குழு கூட்டத்தில் கலந்துகொண்டபோதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார். 

பிரதேசத்தின் அரசியல் பிரதிநிதிகள் மற்றும் அரச அதிகாரிகளின் பங்களிப்பில் இடம்பெற்ற இச்செயற்குழு கூட்டத்தில்  வடமேல் மாகாணத்தில் கிராமசக்தி செயற்திட்டத்தின் முன்னேற்றம் மற்றும் எதிர்கால திட்டங்கள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டன.

பிரதேச விவசாய நிலங்களை வனப்பாதுகாப்பு திணைக்களத்தின் கீழ் கையகப்படுத்தியமையால் ஏற்பட்டிருக்கும் சிக்கலான சூழ்நிலையை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதுடன் விவசாயிகளுக்கு எந்தவித தடையுமின்றி பயிர்ச்செய்கையை மேற்கொள்வதற்கான வழிகளை வகுப்பதுடன், நிரந்தர தீர்வை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்தார். 

பால் உற்பத்தி தொடர்பில் ஏற்பட்டிருக்கும் பிரச்சினைகள் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதுடன், பால் பண்ணையாளர்களின் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு வழங்க முறையான செயற்திட்டங்களை உடனடியாக மேற் கொள்ளுமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார். 

பழச் செய்கையில் ஈடுபடுபவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்தியதுடன் பழங்களின் விலை வீழ்ச்சியை சந்திக்கும்போது விவசாயிகள் முகம்கொடுக்கும் இன்னல்களை தீர்க்கும் விதமாக காகில்ஸ் நிறுவனம் மற்றும் வேறு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி குறித்த உற்பத்திகளை கொள்வனவு செய்வதற்கான செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்துதல் தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டது.   

அதேபோன்று பழங்களை பதப்படுத்தி, நீண்டகாலத்திற்கு பேணுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கிணங்க குளிரூட் டல் வசதிகளுக்கான வரி சலுகைகளை வழங்குவதற்கு நிதி அமைச்சுடனும் சுங்க திணைக்களத்துடனும் கலந்துரையாடி தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளு மாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார். 

இறால் மற்றும் உப்பு தயாரிப்பு மேற்கொள்ளப்படும் நிலங்களின் குத்தகை உரிமையை விவசாயிகளுக்கு வழங்குமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கமைய, மாகாண முதலமைச்சர் தர்மசிறி தசநாயக்க, வடமேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் எஸ்.பி.நாவின்ன தலைமையிலான விசேட குழுவை நியமித்து உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு பணிப்புரை விடுத்தார்.  

கிராமசக்தி செயற்திட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதற்கு அரசியல் வேறுபாடின்றி அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய தேவையையும் ஜனாதிபதி இதன்போது எடுத்துரைத்தார். 

வடமேல் மாகாணத்தின் சகல உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள் இக்கலந்துரையாடலில் பங்குபற்றியமை விசேட நிகழ்வாக கருதப்பட்டதுடன், பொதுஜன முன்னணியில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

மக்களின் தேவைகள் கருதி கிராமசக்தி செயற்திட்டத்திற்கு தங்களின் பங்களிப்பை வழங்க தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார்கள். 

அத்துடன் புத்தளம், குருநாகல் மாவட்ட செயலாளர்களுக்கு கிராமசக்தி மக்கள் சங்கங்களுக்கான முதற்கட்ட நிதி வழங்கும் நிகழ்வும் ஜனாதிபதி தலைமையில் இங்கு இடம்பெற்றது. 

குருநாகல் மாவட்டத்திற்காக 45 மில்லியன் ரூபாவும் புத்தளம் மாவட்டத்திற்காக 24 மில்லியன் ரூபாவும் வழங்கப்பட்டது. 

இதனிடையே வரையறுக்கப்பட்ட கொன்கடவல வட்டக்காய் மற்றும் ஏனைய பயிரினங்களை பயிர் செய்யும் கிராமசக்தி மக்கள் சங்கத்திற்கும் வரையறுக்கப்பட்ட காகில்ஸ் நிறுவனத்திற்குமிடையே உற்பத்திகளை கொள்வனவு செய்தல் தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கை ஜனாதிபதி முன்னிலையில் கைச்சாத்திடப்பட்டது. 

அமைச்சர்களான ரவுப் ஹக்கீம், எஸ்.பி.நாவின்ன, இராஜாங்க அமைச்சர் பாலித்த ரங்கே பண்டார, பிரதி அமைச்சர் இந்திக்க பண்டாரநாயக்க, வடமேல் மாகாண முதலமைச்சர் தர்மசிறி தசநாயக்க ஆகியோரும் மாகாண மக்கள் பிரதிநிதிகளும் அரச அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47