விசாரணையின் பொழுது குறித்த விசாரணை அதிகாரிகளிடம் தனது கையடக்க தொலைபேசியை கையளிக்க மறுத்த குற்றதிற்காக மாலைத்தீவு முன்னாள் ஜனாதிபதி மம்மூன் அப்துல் கயூமுக்கு 19 மாத சிறை தண்டனை விதித்து மாலைத்தீவு நீதிமன்றம் தீர்ப்பளித்தது

மாலைத்தீவு நாட்டு முன்னாள் ஜனாதிபதி மம்மூன் அப்துல் கயூம். 1978-ம் ஆண்டு முதல் 2008-ம் ஆண்டு வரை சர்வாதிகார ஆட்சி நடத்தியவர் 

அவருடைய சகோதரரும், தற்போதைய ஜனதிபதியான யாமீன் அப்துல் கயூமின் ஆட்சியை கவிழ்க்க சதி செய்ததாக, கடந்த பெப்ரவரி மாதம் கயூம் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், விசாரணை அதிகாரிகளிடம் தனது கையடக்க தொலைபேசியை  கையளிக்க மறுத்த குற்றத்துக்காக மம்மூன் அப்துல் கயூமுக்கு 19 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அவருடன் கைது செய்யப்பட்ட தலைமை நீதிபதி அப்துல்லா சயீதுக்கும் அதே குற்றத்துக்காக 19 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்படத்தக்கது..