காலையில் வகுப்புக்குச் சென்று திரும்பிய பல்கலைக் கழக மாணவி மாலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். 

 மண்டூர் காக்காச்சிவெட்டை எனும் கிராமத்தைச் சேர்ந்த 22 வயதான  சங்கராதுரை பானுஜா  என்ற மாணவியே சடலமே மீட்கப்பட்டுள்ளது.

 கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தை அண்டிய நாவற்குடா பிரதேசத்தில் வாடகை வீட்டில் தங்கியிருந்து தனது உயர் கல்வியைக் கற்று வந்த நிலையிலேயே இவ்வாறு நிகழ்ந்துள்ளது.

குறித்த மாணவி தங்கியிருந்த வீட்டுக் கதவு திறக்கப்படாமல் பூட்டப்பட்ட நிலையிலேயே இருந்துள்ளதை அவதானித்து பொலிஸாருக்குத் தகவல் வழங்கியதையடுத்து ஸ்தலத்திற்கு விரைந்த பொலிஸார் மாணவியின் சடலத்தை மீட்டுள்ளனர்.

சடலம் உடற் கூறாய்வுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

குறித்த  சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார்  மேற்கொண்டுவருகின்றனர்.