ஐம்­ப­துக்கு ஐம்­பதா? அல்­லது அறு­ப­துக்கு நாற்­பதா? - பாராளுமன்றமே முடிவெடுக்கும்

Published By: Vishnu

14 Jun, 2018 | 08:20 AM
image

(எம்.எம்.மின்ஹாஜ்)

புதிய கலப்பு முறையின் பிரகாரம் மாகாண சபைத் தேர்தலை ஐம்பதுக்கு ஐம்பது வீதம் நடத்துவதா? அல்லது அறுபதுக்கு நாற்பது வீதம் நடத்துவதா? என்­ப­தனை பாரா­ளு­மன்­றமே தீர்­மா­னிக்க வேண்டும் என்று தேர்­தல்கள் ஆணைக்­கு­ழுவின் தலைவர் மஹிந்த தேசப்­பி­ரிய தெரி­வித்தார்.

தெனி­யாய தேசிய பாட­சா­லையில் நேற்று நடை­பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் உரை­யாற்­று­கையில்,

நாட்டில் தேர்­தல்கள் தாம­த­மா­கின்­றன. உரிய நேரத்தில் தேர்தல் நடத்­தா­விடின் நாட்­டிலும் அரச நிறு­வ­னங்­க­ளிலும் பல குழப்­பங்கள் ஏற்­பட வாய்ப்புள்­ளது. ஆகவே தேர்தல் உடன் நடத்த வேண்டும். இல்­லை யேல் ஜன­நா­ய­கத்­திற்கு அது பெரும் அச்­சு­றுத்­த­லாக அமையும்.

இதனால் ஜன­நா­ய­கமும் அபி­வி­ருத்­தியும் அதள பாதா­ளத்­திற்கு தள்­ளப்­பட்டு விடும். சாதா­ரண சங்கம் என்­றாலும் இடைக்­கி­டையே தேர்தல் நடத்­தப்­பட்டு புதி­ய­வர்கள் தெரிவு செய்­யப்­ப­டு­கின்­றனர். அதே­போன்றே மாகாண சபை­க­ளுக்கு உரிய நேரத்தில் புதி­ய­வர்கள் தெரிவு செய்­யப்­பட வேண்டும்.

மாகாண சபைக்கு புதிய தேர்தல் முறைமை அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. இதன்­படி தற்­போ­தைக்கு ஐம்­பது வீதம் விகி­தா­சார முறை­மையில் இருந்தும்  ஐம்­பது வீதம் தொகுதி வாரி முறை­மையில் இருந்தும் தெரிவு செய்­யப்­பட வேண்டும் என்­பதே புதிய முறை­மையில் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ளது. எனினும் அதனை விட 60 வீதம் தொகுதி வாரி­யா­கவும் 40 வீதம் விகி­தா­சார அடிப்­ப­டையில் தெரிவு செய்ய வேண்டும் என பலர் கோரு­கின்­றனர்.

இந்­நி­லையில் தற்­போது எல்லை நிர்­ணய அறிக்கை பாரா­ளு­மன்­றத்தில் உள்ள நிலையில் அதனை பாரா­ளு­மன்றம் நிறை­வேற்றி தந்தால் மாத்­தி­ரமே எனக்கு தேர் தலை நடத்த முடியும். ஐம்­ப­துக்கு ஐம்­பதா அல்­லது அறு­ப­துக்கு நாற்­பதா என்ற தீர்­மா­னத்தை பாரா­ளு­மன்­றமே எடுக்க வேண்டும். அது­மாத்­தி­ர­மின்றி தொகு­தி­களின் எண்­ணிக்­கையை குறைப்­ப­த­னாலும் அத­னையும் பாரா­ளு­மன்­றமே தீர்­மா­னிக்க வேண்டும். இதற்கு அப்பால் பழைய முறை­மையின் கீழ் தேர்­தலை நடத்­து­வ­தாக இருந்தால் அத­னையும் பாரா­ளு­மன்­றமே தீர்மானிக்க வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50
news-image

யாழ்.மாவட்ட கட்டளை தளபதியை சந்தித்த இந்திய...

2024-03-28 21:36:16
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெரிய நீலாவணை இரட்டை படுகொலை :...

2024-03-28 21:36:38