(இராஜதுரை ஹஷான்)

பேருவளை மற்றும்  அளுத்கமை பிரதேசங்களில் கடந்த 2014 ஆம் ஆண்டு இடம்பெற்ற இன கலவரங்கள் காரணமாக பொது மக்களின் சொத்துகளுக்கு ஏற்பட்ட பாதிப்பிற்கு நட்டஈடு வழங்க அரசாங்கம் அனுமதி  வழங்கியுள்ளது.

குறித்த இந்த இனக்கலவரத்தின் போது பாதிக்கப்பட்ட பிரதேச செயலாளர்களின் தொடர் கோரிக்கைகளுக்கு இணங்கவே இந்த  தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதுடன் விரைவில் பிரதேசவாரியாக இத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.

மேலும் குறித்த கலவரத்தின்போது தெற்கிலும் மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகையால் அவர்களுக்கும் இத் திட்டத்தினூடாக நட்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.

இச் செயற்றிட்டத்திற்காக அரசாங்கம் 185.9 மில்லியன் ரூபா நிதியை ஒதுக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.