70 ஆண்­டு­களாக உணவு, நீர் இன்றி வாழ்ந்த அதிசயம்: வைத்தியர்களை வியக்க வைத்த 88 வயது சாமியார்

Published By: J.G.Stephan

13 Jun, 2018 | 05:21 PM
image

தான் கடந்த 70 ஆண்­டு­க­ளாக எந்­த­வி­த­மான தண்ணீர், உண­வின்றி வாழ்ந்து வரு­வ­தாக இந்­திய குஜராத் மாநி­லத்தைச் சேர்ந்த 88 வயது சாமியார் ஒருவர் தெரி­வித்­துள்ளார். இவரின் உடல்­நி­லையைப் பரி­சோ­தனை செய்த மருத்­து­வர்கள் மிகப்­பெ­ரிய அதி­சயம் என்று வியக்­கின்­றனர்.

குஜராத் மாநிலம் மேக்­சனா மாவட்டம், சாரோட் கிரா­மத்தில் வசித்து வரும் 88 வய­தான பிர­கலாத் ஜனி என்­பவர், உண­வுக்குப் பதி­லாக நாள் முழு­வதும் தியா­னத்­தி­லி­ருந்து காற்றை மட்­டுமே குடித்து வாழ்ந்து வரு­கின்றார். இதனால், உலக அள­வி­லுள்ள இவரின் சீடர்கள் ‘சுவாச ஞானி’ என்று அழைக்­கின்­றனர்.

இவர் உயிர் வாழும் அதி­சயம் குறித்து ஆய்வு செய்ய இது­வரை பல்­வேறு மருத்­து­வர்கள் மற்றும் மறைந்த முன்னாள் ஜனா­தி­பதி அப்துல் கலாம் ஆகியோர் இந்தச் சாமி­யாரை ஆய்வு செய்­துள்ளனர்.

இவரை ஆய்வு செய்த மருத்­து­வர்கள், எந்த அடிப்­ப­டையில் இவர் உயிர்­வாழ்ந்து வரு­கிறார், உடல் உறுப்­புகள் எப்­படி இயங்­கு­கின்­றன என்­பது புரி­யாமல், குழம்­பி­யுள்­ளனர். ஆனால், ஏதோ மிகப்­பெ­ரிய அதி­சயம் ஒன்றால் மட்டும் பிர­கலாத் சாமியார் வாழ்­வதை ஒப்­புக்­கொள்­கின்­றனர்.

கடந்த 2010ஆம் ஆண்டு மத்­திய பாது­காப்புத் துறையின் மருத்­துவம் மற்றும் அறி­வியல் துறை, மத்­திய பாது­காப்பு ஆய்வு மற்றும் மேம்­பாட்டு அமைப்பு (டி.ஆர்.டி.ஓ.) ஆகி­ய­வற்றில் இருந்து சாமியார் பிர­க­லாத்தை ஆய்வு செய்­தனர். அவரை 15 நாட்கள் கண்­கா­ணிப்பில் வைத்­தனர். அவரைச் சுற்றி கெம­ராக்கள் பொருத்திக் கண்­கா­ணித்­தனர். பிர­கலாத் சாமி­யா­ருக்கு எம்.ஆர்.ஐ. ஸ்கேன், அல்ட்ரா சவுண்ட், எக்ஸ்ரே, ரேடி­யா­லஜி, பயோ­கெ­மிக்கல் உள்­ளிட்ட பல்­வேறு மருத்­துவப் பரி­சோ­த­னைகள் செய்­யப்­பட்­டன.

ஆனால், ஆய்வின் முடிவில், சாமியார் பிர­கலாத், தனது உடலில் மிகவும் உச்­ச­கட்­ட­மாக பசியைத் தாங்கும் சக்­தியும், தண்ணீர் தாகத்தை தாங்கும் சக்­தியும், ேஹா­ர்மோன்­களை கட்­டுப்­ப­டுத்­துதல், சக்­தியை மிச்­சப்­ப­டுத்­துதல் போன்­ற­வற்றை அபா­ர­மாகச் செய்து வரு­கிறார் என்று அறிக்கை அளித்­து­விட்டுச் சென்­றுள்­ளனர்.

பிர­தமர் மோடி, குஜராத் மாநிலத்தில் உள்ள பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் சாமியார் பிரகலாத்தை சந்தித்து ஆசி பெற்றமையும் சிறப்பம்சமாகும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right