(இராஜதுரை ஹஷான்)

போராட்டங்கள் மூலமாக எதனையும் சாதிக்க முடியாது பேச்சுவார்த்தைகளின் மூலமாகவே பிரச்சினைகளுக்கான நிரந்தர தீர்வினை பெற்றுக்கொள்ள முடியும் என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

அரசாங்கத்தின் தேவைகருதி எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்படவில்லை. உலக கனியவள சந்தையின் விலை அதிகரிப்புக்கிணங்கவே எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

இந் நிலையில் மண்ணெண்ணெயின் விலையை குறைக்கக் கோரி மீனவர்கள் போராட்டங்களை மேற்கொண்டனர். இதன் காரணமாக கடந்த திங்கட்கிழமை நிதியமைச்சில் விசேட கலந்துரையாடல்களை மேற்கொண்டு, மீனவர்களின் குறிப்பாக  நடுத்தர மீனவர்களின் நலன் கருதி அரசாங்கம் மண்ணெண்ணையை மானிய முறையில் அதாவது குறைவான விலையில் விநியோகிக்க நடவடிக்கை எடுத்தது.

ஆகவே போராட்டங்கள் மூலமாக எதனையும் சாதிக்க முடியாது பேச்சுவார்த்தைகளின் மூலமாகவே பிரச்சினைகளுக்கான தீர்வினை பெற்றுக்கொள்ள முடியும் என்றார்.