ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவ புலனாய்வுப் பிரிவின் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரால் அமல் கருணாசேகரவை மீண்டும் எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

விளக்கமறியல் காலம் முடிவடைந்த நிலையில் அமல் கருணாசேகரவை இன்று கல்கிஸ்ஸை மேலதிக நீதவான் லோச்சன அபேவிக்ரம முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே நீதவான் குறித்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.