இரக்கம் என்ற பேச்சுக்கு இடமில்லை என்று ஆப்கானிஸ்தான் டெஸ்ட் குறித்து இந்திய அணித்தலைவர் ரகானே தெரிவித்துள்ளார்.

இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையிலான டெஸ்ட் போட்டி நாளை பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் தொடங்குகிறது. ஆப்கானிஸ்தானுக்கு இது வரலாற்று சிறப்புமிக்க டெஸ்ட் ஆகும்.

முதல் முறையாக டெஸ்ட் போட்டியில் ஆப்கானிஸ்தான் களம் இறங்கினாலும் நாங்கள் இரக்கம் காட்டமாட்டோம் அதேபோல் அந்த அணியை எளிதாக எடுத்துக் கொள்ள மாட்டோம் என்று  ரகானே கூறியுள்ளார்.

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் குறித்து ரகானே கூறுகையில் ‘‘நாங்கள் ஆப்கானிஸ்தான் டெஸ்ட் அணியை சாதாரணமாக நினைத்து களம் இறங்க போவதில்லை. அவர்கள் சிறப்பாக விளையாடக் கூடிய அணி. குறிப்பாக பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசுகிறார்கள். கிரிக்கெட் ஒரு வேடிக்கையான போட்டி என்பதால் எதிரணிக்கு எந்தவொரு வாய்ப்பையும் விட்டுக் கொடுத்து விடக்கூடாது. நாங்கள் களம் இறங்கி இரக்கமற்ற நிலையில் விளையாட விரும்புகிறோம்.