எஸ். வி. சேகரை கைது செய்யாதது ஏன்? - தி.மு.க. வெளிநடப்பு

Published By: Daya

13 Jun, 2018 | 04:15 PM
image

நடிகரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான எஸ். வி. சேகரை கைது செய்யாதது ஏன் என்பது குறித்து சட்டபேரவையில் விவாதிக்க சபாநாயகர் அனுமதி மறுத்ததால் சட்டமன்றத்திலிருந்து தி.மு.க. வெளிநடப்பு செய்தது என்று தி.மு.க. செயல் தலைவரும், எதிர்கட்சி தலைவருமான ஸ்டாலின் தெரிவித்திருககிறார்.

இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,

‘முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், நடிகருமான எஸ்.வி.சேகர் பத்திரிகை துறையில் பணிபுரிந்து கொண்டிருக்கக்கூடிய பெண் ஊழியர்களை தரங்கெட்ட வகையில் சில விமர்சனங்களை செய்திருக்கிறார். 

அதை முகநூலில் அவருடைய பெயரிலேயே பதிவு செய்திருக்கிறார். இதுகுறித்து பத்திரிகையாளர்கள் மாநகர  பொலிஸாரை சந்தித்து கடந்த ஏப்ரல் 20 ஆம் திகதி அவர் மீது புகார் கொடுத்தனர். 

குறித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவரை கைது செய்வதற்கான முயற்சிகளில் பொலிஸார் ஈடுபட்டனர். ஆனால் அதை எதிர்த்து எஸ்.வி.சேகர் பிணை கேட்டு உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். 

பிணை வழங்க முடியாது என்று அவரது மனுவை உயர்நீதிமன்றம் ஏற்கெனவே தள்ளுபடி செய்தது.

அவர் தலைமைச் செயலாளரின் உறவினர் என்பதால் அவரை இதுவரை கைது செய்யவில்லை. பொலிஸ் பாதுகாவலுடன் சென்று சின்னத்திரை தயாரிப்பாளர் சங்க தேர்தலில் வாக்களித்திருக்கிறார். 

பல்வேறு பொது நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கேற்று இருக்கிறார். ஆனால் இதுவரை அவர் கைது செய்யப்படவில்லை. சபையில் இதுபற்றி பிரச்சினை கிளப்பியபோது இது நீதிமன்ற நடைமுறையில் இருப்பதாக கூறி சபாநாயகர் பேச அனுமதிக்கவில்லை. எனவே அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாங்கள் வெளிநடப்பு செய்தோம்.’ என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47