(கலைச்செல்வன்)

வலை வீசீ தேடபட்டு வரும் பாதாள உலக குழுத்  தலைவர் மாகந்துரே மதூஷின் நெருங்கிய உதவியாளர்கள் மூவர் சற்று முன்னர் கண்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கண்டி - கடுகண்ணாவ  விடுதி ஒன்றில் வைத்தே குறித்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக  பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.   

கைது செய்யப்பட்ட மூவரும் பல்வேறு குற்றச் செயல்களோடு தொடர்புட்டு பொலிஸாரால் தேடப்பட்டு வந்தவர்கள் என்று பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

கண்டி பொலிஸார் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போதே குறித்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.