“அங்கே உருவாகும் பிரச்சினை இங்கே எங்களைப் பாதிக்கிறது” என்ற தலைப்பிலான நிகழ்வு நியூயோர்க்கின் கொலம்பிய பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது.

நியூயோர்க் பல்லின மக்கள் வாழும் இடமாகும். இங்கு அமெரிக்கா, செனகல், தென்கொரியா யேமன் ஆகிய நாடுகளைச் சேர்நத நீதிபதிகள், மதத் தலைவர்கள், இளைஞர்கள் மற்றும் பெண்கள் உட்பட 300 பேர் சேர்ந்து சமதானத்தை கட்டியெழுப்பி சர்வதேச உறவை சீராக்கல் பற்றி கலந்துரையாடியுள்ளனர்.

இவ்வுரையாடலில் எச்.டபிள்யூ.பி. எல்.ஐ டபிள்யூ பி.ஜி. ஐபிவைஜி மற்றும் யேமன் அமெரிக்க சங்கம் என்பன இதில் பங்குபற்றி பன்முகப்பட்ட கலாசாரத்தில் உலக சமாதானம் பேணப்படுதல் பற்றி கலந்துரையாடப்பட்டது.

எங்கள் ஒவ்வொருவரிடம் இருந்தே அமைதியான சமூகம் ஊற்றெடுக்கிறது. ஒரேயொரு துப்பாக்கி வன்முறையை உருவாக்கப் போதுமானது என நியூயோர்க் பொலிஸ் திணைக்கள கெப்டன் ஜமாயில் அல்தகரி தெரிவிததார்.

இன்றைய இளைஞர்களே நாட்டின் நாளைய தலைவர்கள் என மாலி பிரதிநிதி பல்லா சிசோகோ தெரிவித்தார்.

உலகளாவிய குடும்பம் யுத்தத்தை நிறுத்தி உலக அமைதியைப்பேண முன்வர வேண்டும் என எச்.டபிள்யூ.பி.எல். தலைவர் லீ தெரிவித்தார்.