மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையடி வந்த இலங்கை அணியின் வீர்களான அஞ்சலோ மெத்தியுஸ், லஹிரு கமகே ஆகியோர் நாடு திரும்பவுள்ளனர்.

இலங்கைக்கு எதிராக மேற்கிந்தியத்தீவுகளில் இடம்பெற்று வரும் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் மேற்கிந்தியத்தீவுகள் அணி 226 ஓட்டங்களால் வெற்றிபெற்று தொடரில் முன்னிலையில் உள்ளது. 

இந் நிலையில் தொடரில் விளையாடி வந்த இலங்கை அணி வீரர் லஹிரு கமகே உபாதை காரணமாக நாடு திரும்பவுள்ளதுடன் அஞ்சலோ மெத்தியுஸ் தனது தனிப்பட்ட காரணங்களுக்காக போட்டியில் விளையாடாது இலங்கை திரும்பவுள்ளார்.

இவர்களுக்கு பதிலாக இத் தொடரில் விளையாடுவதற்காக  இலங்கை அணியின் வீரர்களான தசூன் சானக்கவும் தனுஸ்க குணதிலக்கவும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு பயணிக்கவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.