இந்தியாவின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவர் முகேஷ் அம்பானி என்பது யாவரும் அறிந்ததே. இவரின் மகன் ஆகாஷ் அம்பானிக்கும், அவரது பள்ளி தோழியும் பிரபல வைர வியாபாரியின் மகளுமான ஸ்லோகா மேத்தாவுக்கும் காதல் மலர்ந்தது. 

இவர்களது காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்ததையடுத்து, இருவருக்கும் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டது. 

திருமணத்தை பிரமாண்டமாக நடத்துவதற்கு தேவையான அனைத்து முன்னேற்பாடுகளும் நடைபெற்று வருகிறது.  இதற்காக அம்பானி குடும்பமே உற்சாகமாக தயாராகி வருகிறது. இந்நிலையில் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும் விதமாக முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் திருமண அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும்.