வட கொரிய தலைவர் கிம் யொங் – உன் மிகவும் திற­மை­யான ஒருவர் என அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப் தெரி­வித்­துள்ளார். சிங்­கப்­பூரின் செந்­தோஸா தீவில் வட கொரியத் தலை­வ­ருடன் உடன்­ப­டிக்கை ஆவ­ண­மொன்றில் கைச்­சாத்­திட்­ட­தை­ய­டுத்து கருத்து வெளியி­டு­கை­யி­லேயே ட்ரம்ப்  இவ்­வாறு தெரி­வித்­துள்ளார்.

"அவர் உண்­மை­யி­லேயே மிகவும் திற­மை­யா­னவர். 26  வயதில்  அவர் ஏற்றுக் கொண்­ட­தை­யொத்த நிலை­மையை (வட கொரி­யாவின் தலைவர் பதவி நிலையை) ஏற்றுக் கொண்டு இவ்­வாறு மிகவும் கடு­மை­யாக செயற்­ப­டுத்­து­வது வேறு எவ­ருக்கும் சாத்­தி­ய­மில்லை"  எனத்  தெரி­வித்தார்.

மேலும்,  எனினும் அவர் இனி­மை­யா­னவர் என நான் கூற­மாட்டேன் என்று  நகைச்­சு­வை­யாகவும் குறிப்பிட்டார்.