ஐக்கிய அரபு அமீரகத்தில் பிறந்து 2 வாரமே ஆன குழந்தையால் 48 வயது பெண்ணுக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஒரு தம்பதியருக்கு கடந்த 2 வாரங்களுக்கு முன்பு ஒரு அழகிய குழந்தை பிறந்தது.

ஆனால் அக் குழந்தை 3 கிலோவிற்கும் குறைவாக இருந்ததால் அதன் உடல்நலம் குன்றி பரிதாபமாய் உயிரிழந்தது.

அதே சமயத்தில் 48 வயது பெண்மணி ஒருவரது சிறுநீரகங்கள் முற்றிலுமாய் செயலிழந்து  ‘டயாலிசிஸ்’ செய்து வந்தார். மேலும் அவர் உயிர் பிழைக்க மாற்று சிறுநீரகத்துக்காக காத்துக் கொண்டிருந்தார்.

இதனைப்பற்றி அறிந்த அந்த குழந்தையின் பெற்றோர் சற்றும் யோசிக்காமல் தங்கள் குழந்தையின் சிறுநீரகத்தை அந்த பெண்ணிற்கு தானம் செய்ய முடிவு எடுத்தனர். 

அதைத்தொடர்ந்து குழந்தையின் சிறுநீரகங்கள் அகற்றப்பட்டு அந்த பெண்ணுக்கு குழந்தையின் சிறுநீரகங்கள் பொருத்தப்பட்டன.

இதைப்பற்றி கூறிய குழந்தையின் பெற்றோர்,

"எங்கள் குழந்தை இறக்கவில்லை அது மற்றொருவருக்கு உயிர் அளித்திருக்கிறது" என்றனர்.

சமூக வலைத்தளங்களில் குழந்தையின் பெற்றோருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.