கோத்தாவுக்கு அமெரிக்க குடியுரிமை தடை இல்லை

Published By: Vishnu

13 Jun, 2018 | 09:09 AM
image

அடுத்த ஜனா­தி­பதி தேர்­தலில், கோத்­த­பாய ராஜ­பக் ஷ போட்­டி­யி­டுவ­தற்கு  அமெ­ரிக்கக் குடி­யு­ரிமை ஒரு தடை­யாக இருக்­காது என்று கூட்டு எதி­ர­ணியின் பாராளு­மன்ற உறுப்­பினர் உதய கம்­மன்­பில தெரி­வித்­துள்ளார்.

 

இது குறித்து அவர் மேலும் தெரி­விக்­கையில்,

அமெ­ரிக்க குடி­யு­ரி­மையைத் துறப்­பது தொடர்­பான, உண்­மை­யான சட்ட நிலையை விளக்­கு­மாறு கோத்­தா­பய ராஜ­பக்ச என்­னிடம் கேட்­டி­ருந்தார். 1952ஆம் ஆண்டின் குடி­வ­ரவு மற்றும் குடி­யு­ரிமை சட்­டத்தில், குடி­யு­ரி­மையைத் துறத்தல் தொடர்­பாக  கூறப்­பட்­டுள்­ளது. இந்தச் சட்­டத்தின், 49(a) (5)  பிரிவு, எந்­த­வொரு குடி­ம­கனும், தனது குடி­யு­ரி­மையைத் துறக்க விரும்­பினால், எந்தக் கட்­டுப்­பா­டு­களும் இன்றி அதனை செய்­யலாம் என்று கூறு­கி­றது. எனினும், தீர்ப்பு வழிச் சட்டம், இரண்டு கட்­டுப்­பா­டு­களை அறி­மு­கப்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.

முத­லா­வது,  அமெ­ரிக்­காவில் இருந்து கொண்டு, விண்­ணப்­பத்தை அளித்தால், அது நிச்­ச­ய­மாக நிரா­க­ரிக்­கப்­படும்.இரண்­டா­வ­தாக, விண்­ணப்­ப­தா­ர­ருக்கு வேறு எந்த நாட்­டிலும் குடி­யு­ரிமை இல்லை என்றால், அவ­ரது விண்­ணப்பம் நிரா­க­ரிக்­கப்­படக்கூடும். 

அமெ­ரிக்க குடி­யு­ரி­மையை துறப்­ப­தற்கு முன்னர், முத­லா­வ­தாக, இன்­னொரு நாட்டில் குடி­யு­ரி­மையைப் பெற வேண்டும். இரண்­டா­வ­தாக,  விண்­ணப்பப் படி­வங்கள், DS4079 , DS4083 இல் கோரப்­பட்ட விட­யங்­களை சேக­ரிக்க வேண்டும். மூன்­றா­வ­தாக, அமெ­ரிக்க தூத­ர­கத்தில், குடி­யு­ரிமை துறப்­ப­தற்­காக அணுக வேண்டும். நான்­கா­வ­தாக, கையெ­ழுத்தை சாட்­சிப்­ப­டுத்தக் கூடிய இரு­வ­ருடன், முன்­னி­லை­யாக வேண்டும். குடி­யு­ரி­மையை துறப்­பதன் மூலம் ஏற்­படும் விளை­வுகள் குறித்து விளக்­க­ம­ளிக்­கப்­பட்ட பின்னர், ஆவ­ணங்கள் ஏற்றுக் கொள்­ளப்­படும். அதன் பின்னர், குடி­யு­ரி­மையை இழக்கும்,சான்று  DS4083, படி­வத்­துடன் வழங்­கப்­படும். இது, தற்­கா­லிக சாரதி அனு­ம­திப்­பத்­திரம் போன்­றது.

பின்னர், அமெ­ரிக்க இரா­ஜாங்கத் திணைக்­க­ளத்­தினால், சான்றிதழ் வழங்கப்படும். இது மிகவும் இலகுவாகவும், விரைவாகவும் செய்யக் கூடிய விடயம். எனவே, கோத்தாபய ராஜபக்ச அடுத்த அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு, அமெரிக்கக் குடியுரிமை தடையாக இருக்காது”

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04