பிணைமுறி மோசடி குற்றச்சாட்டுக்களுக்கு முகம்கொடுக்க தயார்- தலதா அத்துகோரள

Published By: Digital Desk 4

13 Jun, 2018 | 04:49 AM
image

(எம்.ஆர்.எம்.வஸீம்)

மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் குற்றம் சாட்டப்படும் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் அதற்கு முகம்கொடுக்க தயாராகவே இருக்கின்றனர். என நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்தார்.

இரத்தினபுரி கஹவத்த பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,

தற்போது மத்திய வங்கி பிணைமுறி மோசடியில் ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது குற்றச்சாட்டுக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. அந்த குற்றச்சாட்டுக்களுக்கு முகம்கொடுக்க நாங்கள் தயாராவே இருக்கின்றோம். 

ஊழல் மோசடி இல்லாமல் நாட்டை மாற்றும் பொறுப்பை நாங்கள் ஏற்றுக்கொண்டுள்ளோம். என்றாலும் அதிகாரதை பெற்றுக்கொள்ளும் நோக்கத்தில் சிலர் அரசாங்கத்துக்கு எதிராக பொய் குற்றச்சாட்டுக்களை ஏற்படுத்துகின்றனர். விகாரை அமைப்பதற்கும் சர்வமத குழுவின் அனுமதி பெறவேண்டும் என முன்னாள் ஜனாதிபதி தெரிவித்து வருகின்றார். அவ்வாறான முறை ஒன்று இருப்பது எங்களுக்கு தெரியாது. 

மேலும் ராஜபக்ஷ் அரசாங்கம் 20வருடங்களில் மேற்கொண்ட வேலைத்திட்டங்களைவிட பாரிய வேலைத்திட்டங்களை நாங்கள் அதிகாரத்துக்கு வந்து 3வருடங்களில் மேற்கொண்டிருக்கின்றோம். என்றாலும் நாங்கள் அவற்றை விளம்பரப்படுத்தவில்லை. சிறிய வேலைத்திட்டங்களுக்கு பாரிய பதாதைகளை அமைக்கும் செயற்பாடுகளை நாங்கள் நிறுத்தியுள்ளோம். அத்துடன் 2015 ஜனவரி 8ஆம் திகதிக்கு முன்னர் நாடு எந்த நிலையில் இருந்தது என்பதை மக்கள் மறந்துவிடக்கூடாது.  சிந்தித்துப்பார்க்கவேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27