அண்மையில் வெளியான வெல்வெட் நகரம் படத்தின் பெஸ்ட் லுக் போஸ்டர் திரையுலகினரை மட்டுமல்லாமல் அனைத்து தரப்பினரின் வரவேற்பையும் பெற்றிருக்கிறது.

மேக்கர்ஸ் ஸ்டூடியோஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அருண் கார்த்திக் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘வெல்வெட் நகரம்.’ இதில் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார் வரலட்சுமி. இவருடன் மாளவிகா சுந்தர், ரமேஷ் திலக், அர்ஜெய், ‘துருவங்கள் பதினாறு ’ புகழ் பிரகாஷ் ராகவன் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். 

பகத்குமார் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு, ‘அருவி’ படத்தின் படதொகுப்பாளர் ரேமாண்ட் டெரீக் க்ராஸ்தா எடிட்டிங் செய்கிறார். ‘கோலி சோடா=2 ’ புகழ் இசையமைப்பாளர் அச்சு ராஜாமணி இசையமைக்கிறார். இதற்கு திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் மனோஜ்குமார் நடராஜன்.

படத்தைப் பற்றி அவரிடம் கேட்டபோது,‘ கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள ஃபீமேல் சென்ட்ரிக்  (female centric) திரைப்படம் இது. சில ஆண்டுகளுக்கு முன் கொடைக்கானல் மற்றும் சென்னையில் நடைபெற்ற வெவ்வேறு உண்மை சம்பவங்களை தழுவி ஆக்சன் திரில்லராக உருவாக்கப்பட்ட படம் தான் ‘வெல்வெட் நகரம் ’. இதன் திரைக்கதை 48 மணி நேரத்தில் நடைபெறுவது போல் விறுவிறுப்பாக அமைக்கப்பட்டிருக்கிறது.’ என்றார். 

அண்மையில் இப்படத்தின் பெஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இணைய உலகில் பெரும் ஆதரவையும், நல்ல விமர்சனங்களையும் பெற்றிருப்பதால் படக்குழுவினர் உற்சாகமாகியிருக்கிறார்கள். இப்படத்தின் டீஸர் மற்றும் சிங்கிள் ட்ரெக் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.