தொடர்கிறது பணி பகிஷ்கரிப்பு; முடங்கியது தபால் சேவை

Published By: Vishnu

12 Jun, 2018 | 07:03 PM
image

(எம்.சி.நஜிமுதீன்)

தபால் சேவை ஊழியர்கள் நாடு தழுவிய ரீதியில் மேற்கொண்டுள்ள பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக ஐந்து இலட்சத்துக்கும் அதிகமான அஞ்சல்கள் குவிந்துள்ளதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியின் ஏற்பாட்டாளர் சிந்தக்க பண்டார தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

2006 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட புதிய சுற்றறிக்கையின்படி தபால் சேவைக்கான பணியாளர்ளை சேர்த்துக் கொள்ளல், உப தபால் அதிகாரிகளை நியமித்தல் போன்வற்றில் முறையான நடைமுறைகள் பின்பற்றுதல், தபால் சேவையின் முதலாம் இரண்டாம் தர உத்தியோகத்தர்கள் தகுதி அடிப்படையில் இணைத்துக் கொள்ளல் மற்றும் சம்பளப் பிரச்சினை போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தே தபால் சேவை ஊழியர்கள் நேற்று மாலை நான்கு மணியிலிருந்து பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுத்து வருகின்றனர்.

தபால் சேவை ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பினால் தபாலகங்களில் அஞ்சல்கள் குவிந்துள்ளதுடன் வெளிநாட்டு அஞ்சல்கள் கொழும்பு மத்திய தபால் பரிமாற்று நிலையத்தில் குவிக்கப்பட்டுள்ளன. இதனால் நாடு தழுவிய ரீதியில் ஐந்து இலட்சத்திற்கும் அதிகமான அஞ்சல்கள் குவிந்துள்ளது எனக் குறிப்பிட்ட சிந்தக்க பண்டார, எமது கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்கும் வரை போராட்டத்தை கைவிடப்போவதில்லை என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50