அடுத்த வாரம் முதல் புதிய வகை எரிபொருளை அறிமுகப்படுத்தவுள்ளதாக பெற்றோலிய வளத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

அந்தவகையில், சுப்பர் டீசல் மற்றும் ஒக்டெய்ன் - 95 ரக பெற்றோல் ஆகியவற்றுக்குப் பதிலாக யூரோ - 4 ரக எரிபொருளை அறிமுகப்படுத்தவுள்ளதாக பெற்றோலிய வளத்துறை அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.