புரிந்துணர்வு  மற்றும்  சகிப்புத் தன்மைக்கு மன்றம் அமைக்க ஐ.நா முயற்சி

Published By: Digital Desk 4

12 Jun, 2018 | 03:10 PM
image

புரிந்துணர்வு  மற்றும்  சகிப்புத் தன்மைக்கு  ஒரு மன்றம்  அமைக்கும்  முயற்சியாக  சமாதானம்  மற்றும் அபிவிருத்திக்காக  கலாசாரங்களுக்கிடையிலான  கலந்துரையாடல்   நியூயோர்க்கில் உள்ள  ஐக்கிய  நாடுகள்  தலைமைச் செயலகத்தில்  இடம் பெற்றது.

 கனடா, ஆஸ்திரியா, கொலம்பியா, செனகல் குடியரசு  கட்டார் ராஜ்ஜியம் உட்பட  145 நாடுகளின்  பிரதிநிதிகள்  இப்பேச்சு  வார்த்ததையில்  கலந்துகொண்டனர்.

 சமாதானம்  மற்றும்  அபிவிருத்திக்கான  பரந்துபட்ட  கலாசார  உலக தினம் 2018 யை முன்னிட்டு  இடம்பெற்ற  நிகழ்வில்  சமூக  அமைப்புகளின்  தலைவர்கள், மத தலைவர்கள் பெண்கள் அமைப்புகள்  இளைஞர் மன்றங்கள்  மற்றும்  ஊடகத்துறையை  சேர்ந்தோரும்  பங்கேற்றுள்ளனர்.

 புரிந்துணர்வு  மற்றும் சகிப்புத் தன்மைக்கு  ஒரு மன்றம்  அமைக்கும்  முயற்சிக்கு சர்வதேச  ஒத்துழைப்பை வலியுறுத்தும் முகமாக  இம்மாநாடு  இடம் பெற்றது.

எனது நாடு  இருநாடாக  பிளவு பட்டு  நீண்டதொரு  பாரிய   ஆயுத  போராட்டத்திற்கு  முகம் கொடுக்க வேண்டியிருந்தது.  இரண்டு கொலம்பியா  என யுத்தத்தால் மாறியது. ஒன்று அரசு  கொலம்பியா எனவும்  மற்றது சந்தர்ப்பம்  மற்றும் சாத்தியக்கூறு  அற்ற கொலம்பியா  என மாறியது. எமக்கு மீள் புனரமைப்பும்  பேச்சு வார்த்தையும் தேவைப்படுகிறது.  எமது நாடு  ஒரு பரந்துபட்ட  நாடு ஆகும்.  நாங்கள்  உணர்வு  பூர்வமாக  ஆயுதக்களைவு மற்றும்  சமாதானத்தை  கட்டியெழுப்பப் போதுமானதாக  இல்லை என்பதை  உய்த்தறிந்துள்ளோம். 

 சமாதானத்திற்கான தேவையையும் நிலையான   அபிவிருத்தியையும்  நாங்கள்  குறைந்து  மதிப்பிடக்கூடாது என  கொலம்பிய  அரசின்  ஐ.நா நிரந்தர  பிரதிநிதி பிரான்ஸிஸ் கோ  அல்பேட்டோ  கொன் சலீஸ் தெரிவித்தார்.  

சமாதானத்தையும்  அபிவிருத்தியையும் கட்டியேழுப்ப  புலமைசார்  பேச்சுவார்த்தை  அவசியமாகிறது.  பரந்துபட்ட  பேச்சுவார்த்தையை  அபிவிருத்தி செய்ய   ஊடகமும் கல்வித்திட்டமும்  பங்கு பணியாற்ற முடியும். மனிதநேயத்திற்கு  மத மற்றும்  அரசியலின்  நேர்மறையான  தாக்கம்  முக்கியமாகிறது என  ஆஸ்திரியாவின்  ஐ.நா  நிரந்தர பிரதிநிதி  ஜன் கிக்கேட் தெரிவித்தார்.

 சர்வதேச  சமாதான  அரசு சாரா   தொண்டு நிறுவனமான   எச்.டபிள்யூ.பீ.எல் இன் தலைவர்  மான்ஹீலி இம்மாநாட்டிற்கு  சிறப்பு விருந்தினராக  அழைக்கப்பட்டிருந்தார்.  சமாதானத்திற்காக  மீள் உருவாக்கக்கூடிய  அமைதியை  நிலைநாட்ட சர்வதேச  சட்டங்கள்  முழுமையாக  அமுல்படுத்தப்பட வேண்டும் என  அவர் தெரிவித்தார்.

 நான் பல  நாடுகளிற்கு  விஜயம்  மேற்கொண்டுள்ளேன். முன்னாள்  மற்றும்  தற்போதைய  அரச தலைவர்களுடன்  சில  ஒப்பந்தங்களையும்  செய்துள்ளேன்.  யுத்தத்தை   முடிவிற்கு  கொண்டுவர பிரதம நீதியரசர் மற்றும்  சட்ட சபை உறுப்பினர்கள்  ஒப்பந்தம்  செய்து  கொள்ளப்பட்டது என  அவர் மேலும்  தெரிவித்தார். சமாதானத்தை  நிலைநாட்ட அனைத்து  நாட்டு  தலைவர்களும்   முன்வர வேண்டும் என அவர்  வேண்டுகோள்  விடுத்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52