அணிசேரா நாடுகளின் இணைப்பு முக்கியமான நிலையிலும் அண்மைக்காலங்களாக இலங்கை போன்ற நாடுகள் அதன் கொள்கையில் இருந்து விலகிச்செல்வது ஏன் என்று அறிந்துகொள்ள வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

இது தொடர்பில் நாமல் ராஜபக்ஷ தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளதாவது,

அமெரிக்கா மற்றும் வடகொரியாவுக்கு இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் முடிவுகள் இன்னும் தெளிவாகாத நிலையில், அணிசேரா நாடுகளின் இணைப்பே முக்கியமானதென்பது தெளிவாகப் புலப்பட்டுள்ளது.

இந்நிலையில், அண்மைக்காலங்களாக  இலங்கை போன்ற நாடுகள் அணிசேரா நாடுகளின் கொள்கையில் இருந்து விலகிச்செல்வது ஏன் என்று அறிந்துகொள்ள வேண்டியுள்ளதென அவர் டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.