குடிநீர் போத்தல் தொழிற்சாலையை மூடக்கோரி போராட்டம்

Published By: Digital Desk 4

12 Jun, 2018 | 02:22 PM
image

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட புல்லுமலையில் அமைக்கப்பட்டுவரும் குடிநீர் போத்தல் தொழிற்சாலையினை நிறுத்துமாறு கோரி மட்டக்களப்பில் மாபெரும் கவன ஈர்ப்பு போராட்டமும் பேரணியும் இன்று முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு கோட்டைமுனை இந்துக்கல்லூரி விளையாட்டு மைதானத்திற்கு முன்பாக பதாகைகளை ஏந்தியவாறு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பேரணியாக மட்டக்களப்பு மாவட்ட செயலகம் வரையில் சென்றனர்.

 செங்கலடி-பதுளை வீதியில் உள்ள பொது அமைப்புகள் மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பொது அமைப்புகள் இணைந்து இப்போராட்த்தினை நடாத்தியிருந்தனர். 

இதன் போது அரசியல் கட்சியின் பிரதிநிதிகளும் இதில் கலந்துகொண்டனர்.

இந்தரணியில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.வியாழேந்திரன், ஞா.சிறிநேசன்,முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சர் கி.துரைராஜசிங்கம்,முன்னாள் கிழக்கு மாகாண பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார்,முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான கோ.கருணகரம்,இரா.துரைரெட்னம் உட்பட மாநகரசபை உறுப்பினர்கள்,பிரதேசசபை உறுப்பினர்கள்,தவிசாளர்கள்,பிரதி தவிசாளர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

“தொழிற்சாலை அமைக்கும் திட்டத்தினை உடன்தடுத்து நிறுத்து, உன் சொந்த உழைப்பிற்கு எமது நிலத்தினை சோமாலியாவாக மாற்றாதே, மினரல்வோட்டர் கம்பனியால் மிஞ்சப்போவது பாலைவனமே, இயற்கைக்கு உலை வைக்கும் தொழிற்சாலையினை மூடு, எமது வளத்தினை சுரண்டி எவரோ வயிறு வளர்ப்பதா”

போன்ற சுலோகங்களை தாங்கியவாறு பேரணியில் கலந்துகொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59