11 நகரிங்களின் 12 மைதானங்களில் 32 நாடுகள் பங்கேற்கும் 21 ஆவது பிபா உலக் கிண்ணத் தொடர் நாளை மறுதினம் 14 ஆம் திகதி ரஷ்யாவில் ஆரம்பமாகவுள்ளது. 

இத் தொடரில் மொத்தம் 64 போட்டிகள் இடம்பெறவுள்ளதுடன் மொஸ்கோவிலுள்ள லுஸ்னிகி மைதானத்தில் இடம்பெறும் முதல் போட்டியில் தொடரை நடத்தும் ரஷ்யாவும் சவூதி அரேபியாவும் மோதுகின்றன.

இந்த 32 நாடுகளும் தலா 4 அணிகள் என 8 பிரிவுகளாக பரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியிலும் முதலிரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்ததாக நடைபெறும் நொக்கவுட் சுற்றில் விளையாடும். 

போட்டி ஆரம்பமாவதற்கு முன்பாக பிரமாண்ட ஆரம்ப விழாவுக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக 500 ரஷ்ய கலைஞர்களின் கலை நிகழ்ச்சிககளும் நடனம், இசை, ரஷ்யாவின் பிரபலமான டிரம்போலின் கலைஞர்களின் கண்கவர் நிகழ்ச்சிகளும் இடம்பெறவுள்ளன. 

இந்த ஆரம்ப விழா மற்றும் முதல் போட்டியை காண்பதற்காக சுமார் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் மைதானத்துக்கு வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

அத்துடன் இந் நிகழ்வில் பங்கேற்பதற்காக உலகப் புகழ்பெற்ற இசைக் கலைஞர் ரோபி வில்லியம்ஸுன் இசை நிகழ்ச்சியும் பிரபல ரஷ்ய இசைக் கலைஞர் அய்டா கரிபுலினாவின் நிகழ்ச்சியும் இடம்பெறவுள்ளது.

மேலும் இரண்டு முறை உலக கோப்பையை வென்ற பிரேஸில் அணியின் தலைவர் ரொனால்டோவும் பிரபல ஹலிவுட் நடிகர் வில்ஸ்மித், நிக்கி ஜேம் ஆகியோர் உட்பட பல பிரமுகர்களும் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.