பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் உடற்பயிற்சி நிலைய உரிமையாளர் ஒருவரை கத்தியால் குத்திய குற்றச்சாட்டின் பேரில் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த சனிக்கிழமை இரவு 9 மணியளவில் வத்தளை – எந்தேரமுல்ல பகுதியில் வைத்து உடற்பயிற்சி நிலைய உரிமையாளரை தனிப்பட்ட பகை காரணமாக குறித்த தொலைக்காட்சி  நிகழ்ச்சி தொகுப்பாளர் கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார்.

கத்திக்குத்திற்கு இலக்கானவர் கடவத்தையைச் சேர்ந்த 35 வயதானவராவார். இவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருவதாக கடவத்தை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளரையும் கத்தி குத்திற்கு உதவி புரிந்த குற்றச்சாட்டின் பேரில் அவரது இரு பிள்ளைகளையும் கடவத்தை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட மூவரிடமும் ஆரம்பகட்ட விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதையடுத்து இன்று மஹர நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.