ரஜினிகாந்தும் கமல் ஹாசனும் வேறுபட்ட பாணி, வேறுபட்ட கோட்பாடுகள்    

Published By: Priyatharshan

12 Jun, 2018 | 11:31 AM
image

இவ்வருடத்தின் முதல் அரைக்கூறில் நடிகர்கள்  ரஜினிகாந்தும் கமல் ஹாசனும் தமிழ்நாட்டு அரசியலில் கணிசமான அளவுக்கு அடிகளை எடுத்துவைத்து பழைய அரசியல் கட்சிகளிடமிருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்பும் செயற்பாடுகளில் இறங்கியிருக்கிறார்கள்.

இருவருமே சினிமா நடிகர்கள் என்பதே அவர்களுக்கிடையிலான பொதுவான அம்சம். சினிமாவின் மூலமாக மக்கள் மத்தியில் பெற்றுக்கொண்ட செல்வாக்கில் நம்பிக்கை வைத்து மாநில அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றும் நோக்கத்தை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இருவரினதும் கோட்பாட்டு நம்பிக்கைகளையும் தேர்தல்களுக்கு முன்னதாக கட்சிக் கட்டமைப்புக்களை கட்டியெழுப்புவதற்கு மேற்கொள்கின்ற முயற்சிகளையும்  நோக்கும்போது முக்கியமாகக் கவனிக்கக்கூடிய வேறுபாடுகள் இருக்கின்றன என்பது தெளிவாகத் தெரிகிறது.

 கடந்த பெப்ரவரி மாதத்தில் மக்கள் நீதி மய்யம் என்ற தனது கட்சியை  ஆரம்பித்ததிலிருந்து கமல் ஹாசன் ஒரு ' மத்திய போக்கு ' கொள்கை அணுகுமுறையையும் மதசார்பின்மையையும் கடைப்பிடிக்கப்போவதாகக் கூறிவருகின்றார். மத்திய போக்கு என்று அவர் வர்ணிப்பது தற்போதைய பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோனின் அணுகுமுறைகளையேயாகும். கட்சியை ஆரம்பிப்பதற்கு முன்னதாக சுமார் ஒரு வருட காலமாக கமல் ஹாசன் சமூக ஊடகங்களிலும் பிரதான போக்கு ஊடகங்களிலும் தொலைக்காட்சி நேரடி நிகழ்ச்சிகளிலும் தமிழ்நாட்டின் தற்போதைய அரசாங்கத்தை மிகவும் கடுமையாகக் கண்டித்துக்கொண்டு வந்திருக்கிறார். மக்கள் நீதி மய்யத்தை ஆரம்பித்து நான்கு மாதங்கள் கடந்துவிட்ட நிலையில் அவர் இப்போது மக்களிடம் தனது செய்தியை எடுத்துச் செல்லும் பணிகளை முன்னெடுப்பதற்கு கீழ்மட்ட நிருவாகிகளை நியமிப்பதில் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார்.

 இதற்கு மாறுபட்ட முறையில் ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசத்தை அறிவித்த நாள் முதல் ' ஆன்மீக அரசியலை' முன்னெடுக்கப்போவதாகக் கூறிவருகின்றார்.அத்துடன் தனது அரசியல் கட்சியை ஆரம்பிக்கும்வரை அரசியல் பிரச்சினைகள் குறித்து கருத்துக்கூறப் போவதில்லை என்றும் அறிவித்ததைக் காணக்கூடியதாக இருந்தது. அரசியல் குறித்துக் கருத்துக்களை வெளியிடவேண்டாம் என்று தனது ரசிகர்களையும் அவர் கேட்டுக்கொண்டார். உறுதியான நடவடிக்கைகளில் இறங்குவதற்குப் பதிலாக அவர் தான் தொடங்கவிருக்கும் அரசியல் கட்சிக்கான பலம்பொருந்திய அடிப்படைக் கட்டமைப்பை தோற்றுவிப்பதில் கவனத்தைச் செலுத்தியிருக்கிறார்.

ரஜினி மக்கள் மன்றம் எனறு அழைக்கப்படுகின்ற அவரது ரசிகர் மன்றம் செயலாளர்களை, இணைச் செயலாளர்களை, உதவிச் செயலாளர்களை , மகளிர் பிரிவுத் தலைவர்களை, வழக்கறிஞர்கள் பிரிவை, தகவல் தொழில்நுட்பப் பிரிவை ஒவ்வொரு மாவட்டத்திலும் வட்டார மட்டத்திலும் கூட நியமித்திருக்கிறது.வாக்குச் சாவடி மட்டத்தில் உறுப்பினர்களைத் திரட்டுமாறு வட்டாரச் செயலாளர்களிடம் இப்போது டே்கப்படுகின்றது.இந்தச் செயற்பாடுகளின் முன்னேற்றத்தைக் கண்காணிக்க வாராந்த மீளாய்வுக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.

ரஜினி மக்கள் மன்றம் மேற்கொண்ட களப் பணிகள் காரணமாக ' காலா ' திரைப்படத்தின் ஓடியோ வெளியீட்டு விழாவில் பத்தாயிரத்துக்கும் அதிகமானவர்கள் பங்கேற்பதற்கான ஏற்பாடுகளை இலகுவாகச் செய்யக்கூடியதாக இருந்தது.தமிழ்நாடு பூராவுமிருந்து ரசிகர்கள் வந்து கலந்துகொண்டார்கள்.

அதேவேளை, தனது அரசியல் செயற்பாடுகளைத் தீவிரப்படுத்தியிருக்கும் கமல் ஹாசன் தூத்துக்குடி ஸ்டேரலைட் தொழிற்சாலைக்கு எதிரான போராட்டங்களில் பங்கேற்றதுடன் குடியியல் மற்றும் அரசியல் பிரச்சினைகள் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் தனது கட்சி உறுப்பினர்களை ஊக்குவிக்கவும் ' மய்யம்  விசில் ' என்ற மொபைல் அப்பளிக்கேசனையும் ஆரம்பித்திருக்கிறார்.கிராம சபைகளையும் பெ்துக் கூட்டங்களையும் ஏற்பாடு செய்து மக்களுக்கு நெருக்கமாகப் போகுமாறு அவர் கட்சிக்காரர்களைக் கேட்டிருக்கிறார்.

இவ்வாறாக இரு சூபபர் ஸ்டார்களும் தங்கள் செயற்பாடுகளின் மூலமாக மக்களிடம் கொண்டுசெல்கின்ற செய்திகள் வேறுபட்டவையாகவே இருக்கின்றன. தமிழ்நாட்டில் இந்தியன் பிறிமியர் லீக்கிற்கு ( ஐ.பி.எல்.) எதிராக நடந்த ஆர்ப்பாட்டங்கள் தொடர்பில் தனது பரதிபலிப்பை வெளிக்காட்டிய ரஜினிகாந்த் பொலிசாருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களைக் கடுமையாகக் கண்டிப்பதில் கவனம் செலுத்தினார்.தூத்துக்குடியில் ஸ்டேர்லைட் தொழிற்சாலைக்கு எதிரான போராட்டங்களில் சமூக விரோத சக்திகள் செல்வாக்குச் செலுத்துவதாகவும் அவர் சொன்னார். ஸ்டேர்லைட் பிரச்சினையைப் பொறுத்தவரை , சமூக விரோத சக்திகளின் நடவடிக்கைகளே பொலிசார் துப்பாக்கிப் பிரயோகம் செய்யவேண்டிய நிர்ப்பந்தத்தை தோற்றுவித்தன என்று ரஜினிகாந்த் வெளியிட்ட கருத்து கர்ணகடூரமான கண்டனத்துக்குள்ளாகியது.அவரின் நிஜவாழ்க்கைக்கும் திரைவாழ்க்கைக்கும் இடையே ஒப்பீடுகள் செய்யப்பட்டதையும் காணக்கூடியதாக இருந்தது.

இது விடயத்தில் வேறுபட்ட நிலைப்பாட்டை எடுத்த கமல் ஹாசன் ஐ.பி.எல். விவகாரத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் தவறான பகுதிக்குச் சென்றதாகக் கூறியதுடன், ஸ்டேர்லைட் தொழிற்சாலைக்கு எதிரான போராட்டங்களுக்கு பெருமளவுக்கு ஆதரவாக இருந்தார்.

இந்த நிலைவரங்களையெல்லாம் அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது, ரஜினிகாந்தும் கமல் ஹாசனும் இரு துருவங்களாக நிற்கிறார்கள் என்று அர்த்தமாகிறதா? உண்மையில் இல்லை.ஒருவரை மற்றவர் தாக்கிப்பேசுவதை இருவருமே தவிர்க்கிறார்கள்.அதேவேளை, தங்களது செய்திகளை மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்ப்பதற்கு சினிமாவையும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் இருவரும் பயன்படுத்துகிறார்கள்.தமிழ்நாட்டின் தனியான பிரதான பிரச்சினையாக ஊழல் மோசடிகளை இருவரும் மக்கள் முன்னிலையில் சுட்டிக்காட்டுகிறார்கள்.

இருவருமே திராவிட திராவிட உணர்வுகளின் வரம்புக்குள் நிற்கவே முயற்சித்துக்கொண்டிருக்கிறார்கள் என்று சென்னை கிறிஸ்தவ கல்லூரியின் முன்னாள் வரலாற்றியல் பேராசிரியர் கலாநிதி வின்சென்ட் குமாரதாஸ் கூறுகிறார்.' கமல் ஹாசன் மதசார்பின்மை, தென்னிந்திய ஐக்கியம் பற்றிப் பேசி.கூடுதலான அளவுக்கு திராவிட அரசியலுடன் நேரிடையாக ஒட்டிக்கொள்கிறார். அதேவேளை, ரஜினிகாந்த் ஆன்மீக அரசியலை முன்னெடுக்கப்போவதாகக் கூறிக்கொள்கின்றபோதிலும், எம்.ஜி.ஆர்.ஆட்சியை மீண்டும் கொண்டுவரப்போவதாகச்  சூளுரைக்கிறார்.இவர்கள் இருவருமே திராவிட யுகத்தின் உற்பத்திகளே' என்று குமாரதாஸ் விளக்குகிறார்.

கட்சிக் கட்டமைப்புக்களை தோற்றுவிப்பதற்கு முன்னதாகவே மக்கள் நீதி மய்யம் ஆரம்பிக்கப்பட்டதற்கான காரணத்தை விளக்கிக்கூறிய அதன் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் ஒருவர் ' கட்சிக்கு களத்தில் தொண்டர்கள் தேவை என்பதை கமல் ஹாசன் நிச்சயமாக அறிவார்.ஆனால் கட்சித் தொண்டர்கள் என்ன செய்வார்கள் ? மக்களிடம் கொண்டுசெல்வதற்கு தொண்டர்களுக்கு ஒரு செய்தி வேண்டுமே.செய்தி இல்லாமல் வெறுமனே தூதுவர்களை வைத்திருந்து என்ன பயன்?' என்று கேள்வியெழுப்பினார்.

மறுபுறத்திலே, ரஜினிகாந்த் தேர்தல்களில் வெற்றி பெறுவதற்கு கட்சிக்கு உறுப்பினர்கள் தேவை என்று நம்புகிறார்.' கட்சிக் கட்டமைப்பொன்றும் பெரும் எண்ணிக்கையான உறுப்பினர்களும் இல்லாமல் வெறுமனே தனக்கிருக்கும் மக்கள் செல்வாக்கின் காரணமாக மாத்திரம் தேர்தல்களில் வெற்றிபெற முடியாது என்பதை அவர் நன்கறிவார்.பலம்பொருந்திய கட்சிக் கட்டமைப்பு , தனது மக்கள் செல்வாக்கு மற்றும் நோக்கு ஆகியவை எல்லாம் ஒன்று சேர்ந்தே வெற்றயொன்றைத் தரமுடியும் என்று அவர் நம்புகிறார்'.

கமல் ஹாசனையும் விட ரஜினிகாந்தினால் மற்றைய கட்சிகளுடன் இலகுவாகக் கூட்டணியை அமைத்துக் கொள்ளக்கூடியதாக இருக்கலாம் என்று அரசியல் அவதானியும் பிரசுரகர்த்தாவுமான பத்ரி சேஷாத்ரி கூறுகிறார்.' இருவரும் நண்பரகளாக இருக்கலாம்.ஆனால், அரசியல் ரீதியில் முற்றிலும் எதிரெதிரானவர்கள்.ஏற்கெனவே நிலைபேறானவையாக விளங்குகின்ற அரசியல்கட்சிகளிடமிருந்து இருவருக்கும் கடும் எதிர்ப்புகள் வருகின்றன.ஏற்கெனவே இருக்கின்ற எந்தவொரு கட்சியையும் தனது தலைமைத்துவத்தின் மீது நம்பிக்கையை வைக்கச்செய்வதில் கமல்ஹாசன் பெரும் கஷ்டத்தை எதிர்நோக்கவேண்டியிருக்கும்.ஆனால் ரஜினிகாந்தைப் பொாறுத்தவரை இது ஒரளவுக்கு சுலபமானதாக இருக்கக்கூடும்.குறிப்பாக பாரதிய ஜனதா அவரை ஆதரித்து வளர்க்க முன்வரக்கூடும்' என்றும் சேஷாத்ரி கூறுகிறார்.

- உதய் நாய்க்

 ( நன்றி; த இந்து ஆங்கிலம்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22